காதல் திருமணமாகி 20 நாளில் இளம்பெண் திடீர் மரணம்... கோட்டாட்சியர் விசாரணை!

காதல் திருமணமாகி 20 நாளில் இளம்பெண் திடீர் மரணம்... கோட்டாட்சியர் விசாரணை!
EDITSUIT

சென்னை பெரம்பூர் அருகே திருமணமாகி 20 நாட்களேயான புதுப்பெண் உயிரிழந்துள்ள விவகாரத்தில் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

விநாயகபுரம் வேல்முருகன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் இந்துஜா (27), மென்பொருள் துறையில் பணிபுரிந்து வந்தார். கடந்த 5 வருடங்களாக, பெரம்பூர் ஜமாலியா எஸ்பிஐ காலனியைச் சேர்ந்த ஹரிகரன் (30) என்பவரை காதலித்து, கடந்த ஜனவரி 21-ம் தேதி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தார்.

நேற்று முன்தினம் மதியம் கணவர் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த இந்துஜா திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதைக் கண்டு பதறிப்போன கணவர் ஹரிகரன் இந்துஜாவை உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இந்துஜா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஹரிஹரன் மற்றும் அவரது குடும்பத்தினர், இந்துஜாவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து ஓட்டேரி போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் வந்து இந்துஜாவின் உடலை சோதனை செய்தனர். அவரது உடலில் எந்தவிதமான காயங்களும் இல்லை என்பதால் அவரது சாவில் சந்தேகம் ஏற்படவில்லை. அதையடுத்து இந்துஜாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். 

மேலும் திருமணடாகி 20 நாட்களேயாவதால் வழக்கை கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரைத்தனர். புதுப்பெண் திடீரென உயிரிழந்திருப்பது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in