பேருந்து நிலையத்தை தெறிக்கவிட்ட நித்யா; அலறும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள்!

ஆர்டிஓ நித்யா
ஆர்டிஓ நித்யா

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் தனியார் பேருந்துகள் அதிக அளவில் ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பயன்படுத்துகின்றனர். இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்ததோடு, இது குறித்து பல்வேறு புகார்கள் போக்குவரத்து அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், திடீரென பேருந்து நிலையத்திற்கு சென்ற மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா, அங்கு தனியார் பேருந்துகளில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்பொழுது விதியை மீறி பேருந்துகளில் பொருத்தப்பட்ட ஏர் ஹாரன்களை கழட்ட உத்தரவிட்டார். பேருந்து நிலையத்தில் ஒவ்வொரு தனியார் பேருந்துகளையும் சோதனை செய்து அதிலிருந்த ஏர் ஹாரன்களை கழற்ற வைத்தார். சிலர் ஹாரனை, பேருந்தில் இருந்து கழற்ற மறுத்த நிலையில் அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க உத்தரவிட்டார். மேலும், அடுத்த முறை வரும்போது இந்த ஏர் ஹாரனை மீண்டும் பயன்படுத்துவதைப் பார்த்தேன் அவ்வளவுதான் என பேருந்து ஓட்டுநர்களை கடுமையாக எச்சரித்தார்.

ஏர் ஹாரன் குறித்து ஆய்வு மேற்கொள்வதை அறிந்த சில தனியார் பேருந்து ஓட்டுநர்கள் அவர் கண்ணில் படுவதற்கு முன்பாகவே ஹாரன்களை கழற்றிக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த ஆர்டிஓ நித்யா, “பொறுமையா கழட்டுங்க. அவசரம் இல்ல. சூப்பர்... வெரி குட். இப்படித்தான் இருக்க வேண்டும்” என கூறினார்.

ஏர் ஹாரன் பயன்படுத்தும் போது, பிரஷர் குறைந்து பேருந்தின் பிரேக் சரியாக பிடிக்காது என தெரிந்தும் ஏன் இதை பயன்படுத்துகிறீர்கள் என கேள்வி எழுப்பிய அவர், இது உங்கள் உயிருக்கு நீங்களே வைத்துக் கொள்ளும் உலை என்பது தெரியவில்லையா என ஓட்டுநர்களிடம் கடிந்து கொண்டார்.

சில பேருந்து ஓட்டுநர்கள் ஏர் ஹாரன்களை கழட்டி பேருந்து நிலையத்திலிருந்த டீக்கடைகளில் மறைத்து வைத்திருந்தனர். அதனையும் கண்டுபிடித்த பெண் ஆர்டிஓ, அந்த ஹாரன்களைக் கைப்பற்றி தனியார் பேருந்துகளின் சக்கரத்திலேயே வைத்து ஏற்ற வைத்து நசுக்கினார். இப்படி பெண் ஆர்.டி.ஓவின் திடீர் ஆய்வால் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் வாசிக்கலாமே...

ஆர்டிஓ நித்யா
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 250 பாலஸ்தீன குழந்தைகள் மரணம்... அதிர்ச்சி தகவல்!
ஆர்டிஓ நித்யா
பிறந்து 72 நாட்களில் 31 வகையான சான்றிதழ்கள்... உலக சாதனை படைத்த குழந்தை
ஆர்டிஓ நித்யா
கிளாமர் லுக்கில் செம கெத்து காட்டும் நயன்தாரா... அசத்தல் புகைப்படங்கள்!
ஆர்டிஓ நித்யா
இடது பக்கம் அண்ணாமலை... நடுவில் முதல்வர் விஜய்யாம்... வலது பக்கம் டிடிவி; ரசிகர்களின் அட்ராசிட்டி போஸ்டர்
ஆர்டிஓ நித்யா
மாணவர்களுக்கு சப்ளை... உல்லாச வாழ்க்கை; 3,750 போதை மாத்திரைகளுடன் 4 இளைஞர்கள் கைது

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in