'டவுசர் கொள்ளையர்கள் வாறாங்க… யாரும் கதவைத் திறந்து தூங்காதீங்க' : மக்களை அலர்ட் செய்த போலீஸ்!

'டவுசர் கொள்ளையர்கள் வாறாங்க… யாரும் கதவைத் திறந்து தூங்காதீங்க' : மக்களை அலர்ட் செய்த போலீஸ்!

நாமக்கல் அருகே டவுசர் போட்ட முகமூடி கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால், இரவு நேரத்தில் வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்காதீர்கள் என்று காவல்துறை ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகிறது.

நாமக்கல் அருகே இரவு நேரங்களில் திறந்திருக்கும் வீடுகளைக் குறிவைத்து தொடர் கொள்ளை நடைபெற்று வருகிறது. நாமக்கலை அடுத்துள்ள என்.புதுப்பட்டியில் கேபிள் ஆபரேட்டர் வேலு வீட்டில் கடந்த 5-ம் தேதி இரவு 9 பவுன் நகை கொள்ளை போனது. அடுத்தநாள் அதே பகுதியில் உள்ள வினோத் வீட்டில் 4 சவரன் நகை, ஆரியமாலா வீட்டில் 3 சவரன் நகை கொள்ளை போனது. திறந்திருக்கும் வீடுகளுக்குள் புகுந்து வீட்டில் இருப்பவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து கொள்ளையர்கள் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது டவுசர் மற்றும் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இக்கொள்ளைச் சம்பவங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மோகனூர் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

அத்துடன் பொதுமக்கள் யாரும் இரவு நேரங்களில் வீட்டை திறந்து வைத்து தூங்க வேண்டாம் என காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து வருகின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in