'என் பொண்டாட்டி, பிள்ளையை கூட்டிட்டுப் போயிட்டியே!'

நடுரோட்டில் அரிவாளுடன் முதியவரை துரத்திய கணவர்
'என் பொண்டாட்டி, பிள்ளையை கூட்டிட்டுப் போயிட்டியே!'

திருச்சி தேவதானத்தைச் சேர்ந்த பெயின்டர் சந்துரு(43). திருவானைக்காவல் களஞ்சியம் பகுதியைச் சேர்ந்த சென்ட்ரிக் தொழிலாளி சிவக்குமார்(50). இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு சந்துருவின் தங்கை விஜயலட்சுமியை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விஜயலட்சுமி இறந்து விட்டார். அவரது மகளும் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

இந்த நிலையில், தங்கை முறை கொண்ட சந்துருவின் மனைவி சத்யாவுடன் சிவக்குமாருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை சந்துரு பலமுறை கண்டித்துள்ளார். இதனால் அவரது மனைவி கோபித்துக்கொண்டு தனது மகனுடன் வீட்டை விட்டு வெளியேறி சிவக்குமாருடன் குடும்பம் நடத்தி வருகிறார்.

இதனால் ஆத்திரமடைந்த சந்துரு, திருவானைக்காவல் நிலைய மேம்பாலத்தில் சிவக்குமாரை ஓட, ஓடவிரட்டி அரிவாளால் இன்று வெட்டினார். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த தனிப்பிரிவு ஏட்டு ராஜாமணி, சந்துருவை மடக்கிப் பிடித்தார். படுகாயமடைந்த சிவக்குமார், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.