காதலி என்னை வேண்டாம் என கூறிவிட்டார்... காதலன் எடுத்த விபரீத முடிவு!

காதல் தோல்வியால் இளைஞர் தற்கொலை
காதல் தோல்வியால் இளைஞர் தற்கொலை

கர்நாடகாவில் காதல் தோல்வியால் இளைஞர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா கடேசிவாலாயா நெல்லிகுட்டே பகுதியைச் சேர்ந்தவர் சச்சின் (வயது25). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் எலெக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். கடந்த 18ம் தேதி வேலைக்குச் சென்ற அவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், சச்சினை காணவில்லை என பெற்றோர் பண்ட்வால் போலீசில் புகாரளித்தனர்.

அதன்போில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சச்சினை தேடி வந்தனர். இந்தநிலையில், நேற்றுமுன்தினம் மாலை கமாஜே பகுதியில் வாலிபர் ஒருவர் மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசாரின் விசாரணையில், தூக்கில் பிணமாக தொங்கியது காணாமல் போன சச்சின் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ட்வால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே சச்சினின் பேண்ட் பாக்கெட்டில் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில், “என்னுடன் வேலை பார்க்கும் பெண்ணும், நானும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். தற்போது என்னை அந்த பெண் வேண்டாம் என்று கூறிவிட்டார். இதனால் என்ன செய்வது என்று தெரியவில்லை. எனவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன்” என எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் தோல்வியால் இளைஞர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in