கொலையான பெங்களூரு பெண்ணுக்கு 20 சிறுவர்களுடன் தொடர்பு... கால்கேர்ள் ஆஃப்பில் செயல்பட்டதும் அம்பலம்!

கொலை செய்யப்பட்ட ஷோபா, கைது செய்யப்பட்ட நவீன்.
கொலை செய்யப்பட்ட ஷோபா, கைது செய்யப்பட்ட நவீன்.

பெங்களூருவில் வாலிபரால் கொலை செய்யப்பட்ட 48 வயது பெண் கால்கேர்ள் ஆஃப் மூலம் 20 சிறுவர்களுடன் தொடர்பில் இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூரு கொடிகேஹள்ளி பத்ரப்பா லே அவுட்டில் வசித்தவர் ஷோபா(48). இவரது இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்த ஷோபா, கெடிகேஹள்ளியில் வீடு கட்டி தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் ஷோபாவின் உடல் படுக்கை அறையில் கடந்த 19-ம் தேதி நிர்வாணமாக கிடந்தது. இதுதுகுறித்த தகவல் அறிந்த கொடிகேஹள்ளி போலீஸார், வழக்குப்பதிவு செய்து ஷோபாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இக்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இக்கொலை தொடர்பாக ஷோபாவின் உறவினர்கள் மத்தியில் விசாரணை நடத்தினர்.

அப்போது ஹேரோஹள்ளியைச் சேர்ந்த நவீன்(23) என்ற வாலிபருக்கும், ஷோபாவுக்கும் தகாத உறவு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்திய போது, இக்கொலையை நவீன் செய்தது தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட நவீன், கொலை செய்யப்பட்ட ஷோபா.
கைது செய்யப்பட்ட நவீன், கொலை செய்யப்பட்ட ஷோபா.

தன்னைத் தொடர்ந்து பாலியல் உறவுக்கு ஷோபா வற்புறுத்தியால், அவரைக் கொலை செய்ததாக நவீன் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். தனியார் நிறுவன ஊழியரான நவீன், கால் கேர்ள்களுக்கான ஆஃப்களை பயன்படுத்தி அவர்களுடன் அரட்டை அடித்து வந்தார். அப்படித்தான் நவீனுக்கு ஷோபா அறிமுகமாகியுள்ளார்.

இதன் பின் நேரடியாக அவர்கள் சந்தித்துக் கொண்டனர். தான் அழைத்த நேரத்திற்கு நவீன் வரவேண்டும் என்று அவருடன் நவீன் சண்டை போட்டுள்ளார். இல்லாவிட்டால் உங்கள் வீட்டில் வந்து நமது தொடர்பை சொல்லிவிடுவேன் என்றும் பிளாக்மெயில் செய்துள்ளார்.

அத்துடன் பலமுறை உடல் ரீதியாக உறவுக்கு வற்புறுத்தியால் அவரை கழுத்தை நெரித்து நவீன் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. அவரைப் பிடித்து விசாரித்த போது ஷோபா தொடர்பான பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது. நவீன் மட்டுமின்றி 20-க்கும் மேற்பட்ட சிறுவர்களுடன் ஷோபா தொடர்பு வைத்திருந்துள்ளார். ஒவ்வொருவருக்கும் ஒரு பழத்தின் பெயரை வைத்திருந்துள்ளார்.

கால்கேர்ள் ஆஃப்பில் செயல்பட்ட ஷோபாவிற்கு பலருடன் தொடர்பு இருந்துள்ளது. தன்னுடன் பழகுபவர்களை மிரட்டியே அவர் காரியம் சாதித்துள்ளார். அவர் அழைத்த நேரத்திற்கு வராவிட்டால், சம்பந்தப்பட்டவரின் வீட்டிற்கு காரில் செல்வதுடன் ஹார்னை சத்தமாக அடிப்பதுடன், அந்தரங்க புகைப்படத்தை குடும்பத்தினரிடம் காட்டுவேன் என்று மிரட்டுவார். அத்துடன் வேறு யாருடனும் திருமணம் நடக்காதவாறு மிரட்டலும் வந்துள்ளார். அவருடன் பழகிய 4 இளைஞர்களின் திருமணத்தையும் ஷோபா நிறுத்தியது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இரண்டு திருமணமான பெண்களின் தாய், முறையற்ற உறவால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கொடிகேஹள்ளி காவல் நிலைய போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in