காதலனுடன் சென்ற மகள்: ஆத்திரத்தில் காதலனின் தாயைக் கொன்ற தந்தை!

காதலனுடன் சென்ற மகள்: ஆத்திரத்தில் காதலனின் தாயைக் கொன்ற தந்தை!

மகளைக் கடத்திச் சென்று திருமணம் செய்து வைத்த காதலனின் தாயை வெட்டிக் கொன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அபிராமம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் கண்ணாயிரம். இவரது மகள் காவியா(21). இவர் இதே பகுதியைச் சேர்ந்த வினித்(25) என்பவரை காதலித்துள்ளார்.

கடந்த 15 நாட்களுக்கு முன் காவியா காணாமல் போனார். இதுகுறித்து அபிராமம் காவல்நிலையத்தில் கண்ணாயிரம் புகார் செய்தார். விசாரணையில், வினித்தை காவியா திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. இதனால் மகளைக் கடத்தில் சென்று திருமணம் செய்து வைத்தார் என்று வினித்தியின் தாய் ராக்கு(60) மீது கண்ணாயிரம் ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு, ராக்குவை அரிவாளால் கண்ணாயிரம் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த ராக்குவை அக்கம் பக்கத்தினர் கமுதி அரசு மருத்துவமனைக்குச் கொண்டு சென்றனர். ஆனால், போகும் வழியிலிலேயே ராக்கு பரிதாபமாக உயிரிழந்தார். இக்கொலை தொடர்பாக அபிராமம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கண்ணாயிரத்தை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in