ஹேக்கர்ஸ் இம்சை; முகநூல் பக்கத்தையே டெலிட் செய்தது முரசொலி!

முரசொலி முகநூல்
முரசொலி முகநூல்

திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலி முகநூல் பக்கத்தை ஹேக்கர்கள் முடக்கியதோடு, விரும்பத்தகாத வீடியோக்களும் பதிவேற்றம் செய்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் முரசொலியின் அந்த முகநூல் பக்கம் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.

முரசொலி முகநூல் பக்கம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்கெனவே ஒருமுறை ஹேக் செய்யப்பட்டிருந்த நிலையில், இரண்டாவது முறையாக மீண்டும் ஹேக் செய்யப்பட்டது. இதுகுறித்து, முரசொலி மேலாளர் எஸ்.ராஜசேகரன் காவல் துறையில் புகார் அளித்திருந்தார்.

அதில் கடந்த அக்டோபர் 4-ம் தேதி ஃபேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டதோடு, அதில் தொடர்ந்து விரும்பத்தகாத படங்கள் பதிவிட்டப்பட்டதாகவும், அதனை நீக்க வேண்டும் என்றால், சுமார் 17,000 பணம் கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டுவதாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும், உடனடியாக முரசொலி முகநூல் பக்கத்தை மீட்டுத்தர வேண்டும் என அந்த புகாரில் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த சைபர் கிரைம் போலீஸார் தனிப்படை அமைத்து முகநூல் பக்கத்தை மீட்க நடவடிக்கை எடுத்து வந்தனர். ஆனால், அந்த முகநூல் பக்கம் மீட்க முடியாமல் போனதோடு, தொடர்ந்து விரும்பத்தகாத படங்களும் பதிவிடப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது அந்த பக்கம் முழுமையாக நீக்கப்பட்டது.

இதையடுத்து, முரசொலி பத்திரிக்கையின் பெயரில் புதிய முகநூல் பக்கம் தொடங்கப்பட்டு, அதில் இருந்து பதிவுகள் வெளியிடப்பட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சைபர் கிரைம் போலீஸார், பொதுமக்களும் தங்களது சமூகவலைதளப் பக்கங்களின் கடவுச்சொல்லை அவ்வப்போது மாற்ற வேண்டும் என போலீஸார் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

நாளை மகாளய பட்ச அமாவாசை: இந்த விஷயங்களை மறக்காதீங்க!

நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதி... ரசிகர்கள்  அதிர்ச்சி!

இந்த வருஷம் கேம்பஸ் இன்டர்வியூ கிடையாது.. பிரபல ஐடி நிறுவனம் அறிவிப்பு!

செம மாஸ் அறிவிப்பு... இன்று மெட்ரோ ரயிலில் பயணிக்க கட்டணம் கிடையாது!

மனைவி தற்கொலை... விரக்தியில் உயிரையிழந்த கணவர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in