முரசொலியின் முகநூல் பக்கத்தை ஹேக் செய்த மர்ம நபர்கள்... ஆபாச படங்கள் பதிவேற்றம்?

முரசொலி முகநூல் பக்கம்
முரசொலி முகநூல் பக்கம்

திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியின் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக சைபர் போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

முரசொலி நாளிதழின் அதிகாரபூர்வ முகநூல் பக்கம் இன்று மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டதாக, நாளிதழ் மேலாளர் சார்பில் சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முகநூல் பக்கத்தை ஹேக் செய்தவர்கள், அமெரிக்க டாலர் மற்றும் பிட்காயின் வாயிலாக பிணையத் தொகையை செலுத்துமாறு மிரட்டல் விடுத்திருப்பதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே முரசொலியின் முகநூல் பக்கத்தில் ஆபாச படங்கள் இடம்பெற்றிருந்ததாகவும் சமூக ஊடகங்களில் சர்ச்சை எழுந்தது. முகநூல் பக்கத்தை ஹேக் செய்தவர்களின் வேலை இது என்றும், தவறுதலாக ஆபாச படங்கள் முரசொலி பக்கத்தில் ஏறியதால் அந்தப் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாகவும் பல்வேறான தகவல்களை இணையவாசிகள் பகிர்ந்து வருகின்றனர்.

முரசொலி முகநூல் பக்கத்தில் ஆபாசம்?
முரசொலி முகநூல் பக்கத்தில் ஆபாசம்?

இதனிடையே முடக்கப்பட்ட முரசொலி முகநூல் பக்கத்தை மீட்கும் நடவடிக்கைகளை சைபர் போலீஸார் துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.

திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழ் என்பதால், காரமான கருத்துக்களை தாங்கியே முரசொலியின் தினசரி கட்டுரைகள் வெளியாவதுண்டு. இதனால் திமுகவுக்கு எதிரானோர், இந்த முரசொலி முடக்கத்தை பயன்படுத்தி புதிய சர்ச்சைகளை பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் எது உண்மை; எது பொய் என்பது போலீஸ் விசாரணையில் மட்டுமே தெரிய வரும்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... துப்பாக்கியால் சுட்டு ஆசிரியரை பதற வைத்த மாணவர்கள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

டெம்போவில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்யும் மாணவர்கள்

விசித்ரா கூட ஒரே பெட்ல படுக்கணும்... பிரதீப் பேச்சால் பிக் பாஸ் வீட்டில் சர்ச்சை!

கவின் திருமணம் குறித்து முதல்முறையாக மனம் திறந்த லாஸ்லியா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in