அரசு அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... அதிர வைத்த 61 வயது முதியவர்!

61 வயது முதியவர் கைது
61 வயது முதியவர் கைது

மகாராஷ்டிர மாநில அரசின் நிர்வாக அலுவலக கட்டிடமான மந்திராலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 61 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.

மும்பையின் சர்ச் கேட் பகுதியில் மகராஷ்டிரா மாநில அரசின் நிர்வாக அலுவலக கட்டிடமான மந்திராலயம் இயங்கி வருகிறது. நேற்று இரவு 10 மணியளவில் மந்திராலய கட்டுப்பாட்டு அதிகாரிக்கு போன் செய்த நபர், அந்த கட்டிடத்தில் குண்டு வைத்துள்ளதாக கூறி மிராட்டல் விடுத்தார். இதையடுத்து, பதறிப் போன அதிகாரி உடனடியாக போலீஸூக்கு தகவல் அளித்தார். விரைந்து சென்ற போலீஸார், மந்திராலயத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதோடு, போன் அழைப்பு வந்த எண்ணையும் ஆராய்ந்தனர்.

அப்போது அந்த அழைப்பு, மும்பையின் புறநகர் பகுதியான கோத்தக்பூரில் இருந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பிரகாஷ் கிஷன்சந்த் காமேனி என்ற 61 வயது முதியரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த சில நாட்களாக மும்பையில் பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் அதிக அளவில் வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in