அதிர்ச்சி...சூட்கேசில் இளம்பெண்ணின் உடல்: சாலையோரம் வீசப்பட்டதால் பரபரப்பு!

சூட்கேஸில் இளம்பெண் உடல்
சூட்கேஸில் இளம்பெண் உடல்

மும்பை குர்லா பகுதியில் சாலையோரம் கிடந்த சூட்கேஸில், இளம்பெண்ணின் உடல் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை குர்லா பகுதியை அடுத்த சாந்தி நகர் பகுதியில் நேற்று மாலை சூட்கேஸ் ஒன்று நீண்ட நேரமாக கிடந்துள்ளது. இதனைப் பார்த்த சிலர், காவல் துறைக்கு உடனடியாக தகவல் அளித்தனர். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், அந்த சூட்கேஸை கைப்பற்றி சோதனை செய்தனர். அதன் உள்ளே ஒரு இளம் பெண்ணின் உடல் இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக இறந்த பெண்ணின் சடலத்தை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக சிவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண் யார், அவர் மும்பையைச் சேர்ந்தவரா அல்லது வேறு மாநிலத்தவரா என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே அந்த பெண்ணுக்கு என்ன நடந்தது என்பது தெரியவரும் என்றும் போலீஸார் கூறியுள்ளனர்.

அந்த பெண்ணினை உடலைப் பார்க்கும்போது, ​​அவரது வயது 25 முதல் 35 வயதிற்குள் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த பெண் டீ-சர்ட் மற்றும் டிராக் பேண்ட் அணிந்திருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள மும்பை போலீஸார், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

சேலையில் ஒய்யாரமாய் வலம் வரும் பிரபல நடிகை

உஷார்... சிக்கன் பிரியாணியால் சுயநினைவை இழந்த 3 பேர்!

மணி ரத்னத்தால வாழ்க்கையே போச்சு.. நாசம் பண்ணிட்டார்... பொதுவெளியில் புலம்பிய பிரபலம்!

கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்த 2ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

புகார் கொடுக்க வந்த சிறுமியை சீரழித்த உதவி ஆய்வாளர் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in