‘ரூ.400 கோடி வேண்டும்...’ முகேஷ் அம்பானிக்கு மூன்றாவது கொலை மிரட்டல் கடிதம்!

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானிக்கு, கடந்த 4 நாட்களில் மூன்றாவது முறையாக மின்னஞ்சலில் கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

உலகப் பணக்காரர்களில் ஒருவரும் இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பெருநிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானிக்கு அநாமதேய கொலை மிரட்டல் கடிதங்கள் வருவது வழக்கம். ஆனால் கடந்த 4 நாட்களில் மின்னஞ்சல் வாயிலாக பல கோடி கேட்டு 3 கொலை மிரட்டல் கடிதங்கள் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளன.

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி

கடந்த வாரம் வெள்ளியன்று ரூ20 கோடி கேட்டு முதல் கொலைமிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. அடையாளம் தெரியாத நபர் அனுப்பிய அந்த மிரட்டல் மின்னஞ்சல் தொடர்பாக, ரிலையன்ஸ் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரி காவல்துறையில் புகார் அளித்தார். ஆனால் அடுத்த நாளான சனியன்று இன்னொரு கொலை மிரட்டல் கடிதம் வந்தது.

அதில் முகேஷ் அம்பானி ரூ200 கோடி தொகையை தராவிடில் கொல்லப்படுவார் என்று இருந்தது. இடையில் ஞாயிறு அன்று மின்னஞ்சல் மிரட்டலுக்கு விடுமுறை போலும்! அதற்கடுத்த தினமான திங்களன்று மூன்றாவது கொலை மிரட்டல் மின்னஞ்சல் முகேஷ் அம்பானிக்கு வந்தது. அதில் ரூ400 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை இன்று தெரிவித்துள்ளது.

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி

இந்தியாவின் பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு கொலை மிரட்டல் கடிதம் வருவதும், அவரது நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவதும் அவ்வப்போது நடக்கும். ஆனால் ரூ20 கோடியில் தொடங்கி ரூ.400 கோடி வரை அடுத்தடுத்து 3 மிரட்டல் கடிதங்கள் வந்திருப்பது காவல்துறை விசாரணையை துரிதமாக்கி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... திமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி கொலை!

பகீர்... 81 கோடி இந்தியர்களின் ஆதார் தரவுகள் விற்பனை...  சிபிஐ விசாரணை!

இன்றே கடைசி தேதி... 2250 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

மைதானத்தில் வீராங்கனைக்கு முத்தமிட்ட விவகாரம்... லூயிஸுக்கு 3 ஆண்டுகள் தடை!

பரபரப்பு… பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in