2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற தாய்: தற்கொலைக்கு முயன்ற போது காப்பாற்றிய  உறவினர்!

2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற தாய்: தற்கொலைக்கு முயன்ற போது காப்பாற்றிய உறவினர்!

கணவன் இறந்த துக்கம் தாளாமல் தனது இரண்டு மகன்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய், தானும் உயிரை மாய்க்க முயன்ற போது உறவினரால் காப்பாற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம், பூதலூர் அருகே உள்ள வெண்டயம்பட்டியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி சத்யா(30). இவர்களுக்கு முகேஷ்(7), நிதிஷ்(5) என இரண்டு மகன்கள் இருந்தனர். கடந்த மார்ச் மாதம் உடல்நலக்குறைவால் விஜயகுமார் இறந்து போனார்.

இதனால் துக்கத்தில் இருந்த சத்யா, கணவன் இல்லாமல் தனது குழந்தைகளை எப்படி வளர்ப்பது என கவலைப்பட்டார். இதனால் தன் குழந்தைகளோடு சாக முடிவெடுத்தார். இதையடுத்து தனது இரண்டு மகன்களுக்கும் நேற்று விஷத்தைக் கொடுத்தார். இதன் பின் இவர் விஷம் குடிக்க முயன்ற போது அவரது உறவினர் ரெங்கசாமி அங்கு வந்தவர், அதிர்ச்சியடைந்தார். உடனடியாக விஷத்தைத் தட்டி விட்டார். உடனடியாக சத்யா உள்ளிட்ட மூவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு சிகிச்சைப் பலனின்றி நிதிஷ் உயிரிழந்தார். இன்று காலை முகேஷ் உயிரிழந்தார். சத்யா தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பூதலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற தாயே தனது 2 பிள்ளைகளுக்கு விஷத்தைக் கொடுத்து கொன்று தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம், பூதலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.