சோகம்... தாய் தற்கொலை செய்ததைப் பார்த்து உயிரை விட்ட 15 வயது மகள்!

சோகம்... தாய் தற்கொலை செய்ததைப் பார்த்து உயிரை விட்ட 15 வயது மகள்!

உடல்நலக்குறைவால் கணவர் உயிரிழந்ததால் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மகளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், மைசூர் சரகுரு தாலுகாவில் உள்ள ஷங்கஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜநாயகம். இவரது மனைவி கீதா(40), மகள் பூர்ணிமா(15). கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் ராஜநாயகம் இறந்து விட்டார். இதனால் அவரது மனைவி கீதா அதிர்ச்சியடைந்தார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் தெரிவித்தனர். உனக்கு மகள் இருக்கிறாள், அவளை வளர்க்க வேண்டும் என்று கீதாவிடம் அவர்கள் அறிவுரை வழங்கினர்.

ஆனாலும், கணவரைப் பிரிந்த சோகம் கீதாவை வாட்டியது. இதனால் அவர் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் கீதா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பள்ளி சென்று விட்டு வீடு திரும்பிய பூர்ணிமா, தாய் தற்கொலை செய்து கொண்டிருப்பது பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனால், அவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த செய்தி அறிந்த சரகுரு போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தற்கொலை செய்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கணவர் இறந்த சில நாட்களில் தாய், மகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in