பகீர்... 2 குழந்தைகளைக் கொடூரமாக கொன்ற போலீஸ்காரரின் மனைவி... மணிக்கட்டை வெட்டி தற்கொலை!

கொலை
கொலை

டெல்லி முனிர்காவில் போலீஸ்காரரின் மனைவி தனது இரண்டு குழந்தைகளையும் வெட்டிக் கொன்று விட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை
குழந்தை

தெற்கு டெல்லியின் முனிர்காவில் உள்ள ஒரு வீட்டில் இளம்பெண், அவரது இரண்டு பெண் குழந்தைகளுடன் இறந்து கிடப்பதாக கிஷன்கர் காவல் நிலையத்திற்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து 4வது மாடியில் உள்ள அந்த வீட்டிற்கு போலீஸார் சென்ற போது உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது.

கொலை
கொலை

இதையடுத்து தீயணைப்புத்துறையினர் உதவியுடன் அந்த வீட்டிற்குள் போலீஸார் சென்றனர். அங்கு மெத்தையில் 27 வயது பெண், இரண்டு குழந்தைகளின் சடலங்கள் கிடந்தன. இறந்த மூவரின் மணிக்கட்டில் கூர்மையான காயங்கள் இருந்தன.

போலீஸார் நடத்திய விசாரணையில் அந் பெண், போதைப்பொருள் கட்டுப்பணியகத்தில்(என்சிபி) பணியாற்றும் போலீஸ்காரர் ஜோகிந்தர் ஷர்மாவின் மனைவி வர்ஷா என்பது தெரிய வந்தது. இறந்தது அவரது நான்கு மற்றும் இரண்டரை வயது குழந்தைகள் என்பதும் தெரிய வந்தது. கடந்த 2017-ம் ஆண்டு ஜோகிந்தர் ஷர்மாவை வர்ஷா திருமணம் செய்துள்ளார் என்பது விசாரணையில்தெரிய வந்தது.

தனது இரண்டு குழந்தைகளின் மணிககட்டையும் வெட்டி, பின்னர் தனது மணிக்கட்டையும் வெட்டி வர்ஷா தற்கொலை செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில்," வர்ஷா தனது குழந்தைகளைக் கொன்ற பிறகு தற்கொலை செய்ததாக தெரிகிறது. எதற்காக அவர் இந்த நடவடிக்கையில் இறங்கினார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சப்- டிவிஷனல் மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்துள்ளோம். சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றனர்.

தனது 2 குழந்தைகளைக் கொன்று விட்டு போலீஸ்காரரின் மனைவி தற்கொலை செய்த விவகாரம், டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in