இப்படியெல்லாம் செய்வாங்களா?... 6 மாத ஆண் குழந்தை காணாமல் போன வழக்கில் தாய் கைது!

குழந்தை
குழந்தை

பிறந்து 3 மாதமான ஆண் குழந்தையைக் குப்பைத் தொட்டியில் வீசி விட்டு கடத்தல் நாடகமாடிய தாயிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை மதுரவாயல் தனலட்சுமி நகர் 6-வது தெருவைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ரவி. இவரது மனைவி அஞ்சலி. திருச்சியைச் சேர்ந்த இவர்களுக்கு 3 மாதத்தில் திரு என்ற ஆண் குழந்தை உள்ளது . கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தான் ரவி இங்கு தனது குடும்பத்துடன் மதுரவாயலுக்கு குடிபெயர்ந்துள்ளார். நேற்று மாலை அஞ்சலி தனது குழந்தை திருவை தூங்க வைத்து விட்டு அருகில் உள்ள குளியலறையில் குளிப்பதற்காக புறப்பட்டுள்ளார். அப்போது அங்கு வந்த ஆண், பெண் இருவர் இங்கு வீடு வாடகைக்கு உள்ளதா என்று அஞ்சலியிடம் கேட்டுள்ளனர்.

அதற்கு அஞ்சலி தனக்குத் தெரியாது என்று,ம் நாங்கள் குடி வந்தே மூன்று நாட்கள் தானாகிறது என்று கூறிவிட்டு குளிக்கச் சென்றார். பின்னர் குளித்து விட்டு வந்து பார்த்த போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஆண் குழந்தை காணாமல் போனது கண்டு அதிர்ச்சிடைந்தார். இதுகுறித்து மதுரவாயல் காவல் நிலையத்திற்கு அஞ்சலி தகவல் தெரிவித்தார். இதன் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து அஞ்சலியிடம் விசாரணை நடத்தினர் . அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மதுரவாயல் காவல் நிலையம்
மதுரவாயல் காவல் நிலையம்

இருப்பினும் போலீஸார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குழந்தை கடத்தப்பட்டது உண்மையா அல்லது கணவன் மனைவி இருவரும் நாடகமாடுகிறார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தினர். பின்னர் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அஞ்சலி கையில் ஒரு குப்பை பையை கொண்டு செல்வது பதிவாகியிருந்தது.

இதனால் சந்தேகமடைந்த போலீஸார் அஞ்சலியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது குப்பையை ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் போட்டதாக தெரிவித்தார். உடனே போலீஸார் அங்கு சென்று பார்த்த போது தடயம் ஏதும் கிடைக்கவில்லை. அஞ்சலியிடம் நடத்திய தொடர் விசாரணையில் தனது தோழி அனிதா -சுரேஷ் தம்பதிக்கு குழந்தை இல்லாததால் அவர்களிடம் கொடுத்து குழந்தையை வளர்க்கச் சொன்னதாக கூறியுள்ளார்.

இதையடுத்து அஞ்சலியை அழைத்து சென்று பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் அனிதாவை போலீஸார் தேடினர். ஆனால், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது அஞ்சலி திடீரென போலீஸாரிடம் குழந்தை இறந்து விட்டதாகவும், அதனைத் துணியில் சுற்றி குப்பைத் தொட்டியில் வீசி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் போலீஸார் அங்கு சென்று பார்த்த போது மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை பெருங்குடியில் உள்ள குப்பைக் கிடங்கில் கொண்டு சென்று கொட்டியது தெரியவந்தது. இதனை அடுத்து அஞ்சலியை கைது செய்த போலீஸார் குப்பைக் கிடங்கில் குழந்தை உடலை பொக்லைன் இயந்திரம் மூலம் தேடிவருகின்றனர்.

குழந்தை உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே குழந்தை இயற்கையாக இறந்ததா அல்லது கொலை செய்யப்பட்டு இறந்ததா என்பது குறித்து தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in