அதிர்ச்சி... ஒரே சேலையைக் கட்டிக் கொண்டு ஆற்றில் குதித்து தாய், மகள் தற்கொலை!

ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சுமலதா, வர்ஷா.
ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சுமலதா, வர்ஷா.

ஒரே சேலையைக் கட்டிக் கொண்டு தாயும், மகளும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்புர்கி
கல்புர்கி

கர்நாடகா மாநிலம், கல்புர்கி மாவட்டம், ஷஹாபாத் தாலுகாவில் உள்ள காகினா நதியில் இன்று காலை இரண்டு பெண்களின் உடல்கள் கரையோரம் ஒதுங்கியிருந்தன. இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள், உடனடியாக சஹாபாத் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அங்கு விரைந்து வந்த போலீஸார், நதியில் இருந்த இரண்டு பெண்களின் உடல்களையும் மீட்டனர். அப்போது இரண்டு பெண்களும் ஒரே சேலையைக் கட்டிக்கொண்டு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

போலீஸார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், தற்கொலை செய்து கொண்டவர்கள் அஃசல்பூர் தாலுகாவில் உள்ள நிலூர் கிராமத்தைச் சேர்ந்த சுமலதா (41) அவரது மகள் வர்ஷா (17) என்பது தெரிய வந்தது. அவர்களது உடல்களைப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்த தாயும், மகளும் தற்கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக அவர்களது குடும்பத்தினரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயும், மகளும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இந்தியன் ரயில்வேயில் 9,000 காலி பணியிடங்கள் அறிவிப்பு!

அதிர்ச்சி... ஒரே விடுதியில் அடுத்தடுத்து மாணவர், மாணவி தூக்கிட்டு தற்கொலை!

நடுரோட்டில் கட்சி மாறிய அதிமுக நிர்வாகி... வேட்டியை அவிழ்த்து சாலையில் வீசியதால் பரபரப்பு!

‘ஐயா மன்னிச்சுடுங்க...’ இயக்குநர் வீட்டு கதவில் தேசிய விருதுகளை தொங்க விட்ட திருடர்கள்!

கல்வி மட்டுமல்ல... 200 மாணவிகளுக்கு வீடும் கட்டித் தந்த ஆசிரியை; குவியும் பாராட்டுகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in