வீட்டிற்குள் அலறல் சத்தம்; 70 வயது மூதாட்டி, மகள் வெட்டிக்கொலை: ம.பியில் பயங்கரம்!

கொலை நடந்த இடத்தில் போலீஸ் விசாரணை
கொலை நடந்த இடத்தில் போலீஸ் விசாரணை
Updated on
1 min read

மத்தியப்பிரதேசத்தில் 70வயது மூதாட்டி அவரது மகளுடன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம், பாலகாட் மாவட்டத்தில் உள்ள நெவ்கானைச் சேர்ந்தவர் சந்திராவதி(70). இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருந்தனர். இந்த நிலையில் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள தொழிலதிபர் ரமேஷ் பாய் டேங்கின் பூர்வீக வீட்டைக் கவனித்துக் கொள்வதற்காக சந்திராவதி, அவரது மகள் புல்வந்தா(55), அவரது கணவர் புலகி சுலாகேவுடன் 30 ஆண்டுகளாக அங்கு வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று இரவு இவர்கள் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. இதைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது, ரத்த வெள்ளத்தில் சந்திராவதி, அவரது மகள் புல்வந்தா ஆகியோரின் தலையில் கூரிய ஆயுங்களால் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுக்கிடந்தனர்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீஸார், இரண்டு பேரின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.

கொலை நடந்த போது, புல்வந்தாவின் கணவர் கர்நாடகாவில் வசிக்கும் மகளைப் பார்க்க சென்றுள்ளார். சந்திராவதியின் மகனும், மனைவியும் பணி நிமித்தமாக தாதியாவில் வசிக்கின்றனர். அவரது மூத்த மகள் போபாலில் கணவருடன் வசிக்கிறார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் இறந்தவர்களின் கைகளில் தங்க வளையல்கள், வீட்டுச் சாவிகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் திருடு போகாமல் இருந்தது. இதனால் இந்த இரட்டைக் கொலை கொள்ளை நோக்கத்திற்காக நடத்தப்படவில்லை என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 70 வயதான மூதாட்டியும், அவரது மகளும் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in