விக்னேஷ் கொலையில் மேலும் 4 போலீஸ்காரர்கள் கைது: அதிரடி காட்டும் சிபிசிஐடி

விக்னேஷ் கொலையில் மேலும் 4 போலீஸ்காரர்கள் கைது: அதிரடி காட்டும் சிபிசிஐடி

விக்னேஷ் கொலை வழக்கில் மேலும் 4 காவலர்களை எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழ் சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் பகுதியில் கடந்த மாதம் 19-ம் தேதி அதிகாலை கஞ்சா மற்றும் பட்டாக்கத்தி வைத்திருந்ததாக ஆட்டோவில் வந்த பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து கடந்த 19-ம் தேதி காலை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி விக்னேஷ் உயிரிழந்தார். காவல் துறையினர் தாக்கியதே விக்னேஷின் மரணத்துக்குக் காரணம் என குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. இதனிடையே, விக்னேஷ் உடலில் 13 காயங்கள் இருந்ததாகவும், தலையில் 1 செ.மீ அளவில் துளை போன்ற காயம் இருந்ததாகவும், இடது காலில் முறிவு ஏற்பட்டிருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, விக்னேஷ் சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து சிபிசிஐடி.

இதற்கிடையே தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சார்பில் விக்னேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய 5 காவலர்களை கைது செய்ய வேண்டும் என தமிழக டி.ஜி.பி-க்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக எழுத்தர் முனாஃப் மற்றும் காவலர் பவுன்ராஜ் ஆகிய இருவரை கைது செய்தது சிபிசிஐடி. இந்நிலையில், ஊர்க்காவல் படை வீரர் தீபக், தலைமை காவலர் குமார் உட்பட மேலும் 4 காவலர்களை சிபிசிஐடி கைது செய்தது. இவர்கள் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிசிஐடி வழக்கு பதிவு செய்துள்ளது. விக்னேஷ் கொலை வழக்கில் இதுவரை 6 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.