2 சூட்கேஸ்களில் சிக்கிய பணம்... 5வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு... சிக்கலில் அமைச்சர் எ.வ.வேலு!

அமைச்சர் எ.வ.வேலு
அமைச்சர் எ.வ.வேலு

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 5வது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், 2 சூட்கேஸ்களில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூர் கிராமத்தில் உள்ள அமைச்சருக்கு சொந்தமான வீடு, பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் கடந்த 3ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை தொடங்கினர். இந்த சோதனை 5வது நாளாக நீடிக்கிறது.

திங்கட்கிழமை இரவு விடிய விடிய சோதனை நீடித்த நிலையில், இன்று காலையும் தொடர்கிறது. 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ள நிலையில், அனைத்து இடங்களின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் பென் ட்ரைவ்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ரொக்கமாக 18 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இன்று இரண்டு சூட்கேஸ்கள் நிறைய பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவை அங்குள்ள எஸ்பிஐ வங்கிக்கு பலத்தப் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அமைச்சர் எ.வ.வேலுக்கு எதிராக பல ஆவணங்கள் சிக்கியுள்ளதால், அவருக்கு சம்மன் அனுப்பி கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!

இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில்  பாதுகாப்பு படை வீரர் காயம்!

திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!

வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in