
கடன் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த பாஜக மாநில நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேரை சென்னை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஹரிந்தர் பால் சிங், தொழில் வளர்ச்சிக்காகச் சிங்கப்பூர் நிதி நிறுவனத்திடம் இருந்து ரூபாய் 70 கோடி கடனாகப் பெற்றுத் தருவதாகக் கூறி தன்னை சிலர் ஏமாற்றியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் சிவகங்கைச் சேர்ந்த ராஜசேகர் (65) என்பவரை மத்திய குற்றப்பிரிவு மோசடி மற்றும் ஆவணங்கள் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவராக உள்ளார்.
இவருடன் சேர்ந்து ஆலப்பாக்கம் சேர்ந்த ரஜிதா மெர்னல்சன் என்கிற ரேஷ்மின் (36), ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த ராமு(37), போரூரைச் சேர்ந்த தசரதன்(30) என மொத்தம் நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் சேர்ந்து ஹரிந்தர் பால் சிங்கிடம் சிங்கப்பூர் நிதி நிறுவனத்திடம் இருந்து ரூபாய் 70 கோடி கடன் வாங்கி தருவதாகக் கூறி 1.40 கோடி மோசடி செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 1.10 லட்சம் ரொக்கம் மற்றும் அதிநவீன பார்ச்சுனர் காரையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். போலீஸார் நடத்திய விசாரணையில் பாஜக மாநில நிர்வாகி ராஜசேகர் மீது வேலை வாங்கி தருவதாக மோசடி, கடன் மோசடி, கட்டப்பஞ்சாயத்து என மொத்தம் ஏழு வழக்குகள் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நிலுவையில் உள்ளது தெரிய வந்ததுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
இன்று மகாளய அமாவாசை... இதைச் செய்தால் கடன் தொல்லைத் தீரும்!
இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000... திட்டத்தை உடனே நிறுத்தச் சொல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
பேச மறுத்த காதலி... வெறித்தனமாய் 13 முறை கத்தியால் குத்திய காதலன்!
தங்கம் விலை அதிரடியாக உயர்வு... சவரனுக்கு ரூ.360 உயர்ந்தது!
இன்று வானில் வர்ணஜாலம்... நெருப்பு வளையத்திற்குள் நிகழப்போகும் அற்புதம்!