பூட்டிய வீட்டிற்குள் கிடந்த தாய், மகள் உடல்கள்: காரணம் என்ன என போலீஸார் விசாரணை

பூட்டிய வீட்டிற்குள் கிடந்த தாய், மகள் உடல்கள்: காரணம் என்ன என போலீஸார் விசாரணை

மேலூர் அருகே பூட்டிய வீட்டிற்குள் தாய், மகள்கள் இறந்து கிடந்தனர். அவர்கள் உடல்களை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மேலூர் அருகே உள்ள அட்டபட்டியைச் சேர்ந்தவர் சுப்பம்மாள்(65). இவரது மகள் பாண்டியம்மாள்(40). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் அதே ஊரை சேர்ந்த செல்லம் என்பவருக்கும் பாண்டியம்மாளுக்கும் திருமணம் நடந்தது. ஆனால், சில மாதங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவனை பிரிந்து பாண்டியம்மாள் அதே ஊரில் அவரது தாயார் வீட்டில் இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக உடல் நிலை பாதித்து அவதிப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த மேலூர் காவல்துறை ஆய்வாளர் சார்லஸ் மற்றும் கீழவளவு துணை ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் நேற்று நள்ளிரவில் சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது வீட்டிற்குள் சுப்பம்மாள், பாண்டியம்மாள் சடலமாகக் கிடந்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், இவர்கள் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளனர். அவர்கள் இறந்து சில நாட்களாயிருக்கலாம் என்றனர். அவர்கள் இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, கீழவளவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in