மகாராஷ்டிராவில் அதிர்ச்சி... எம்எல்ஏ வீட்டிற்கு தீவைப்பு; தீவிரமாகும் இட ஒதுக்கீடு போராட்டம்

மகாராஷ்டிராவில் அதிர்ச்சி... எம்எல்ஏ வீட்டிற்கு தீவைப்பு; தீவிரமாகும் இட ஒதுக்கீடு போராட்டம்

மராத்தா இட ஒதுக்கீடு கோரும் போராட்டக்காரர்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ வீட்டிற்கு தீவைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் இருக்கும் பெரும்பான்மை மராத்தா பிரிவினர் நீண்ட காலமாக இட ஒதுக்கீடு வேண்டி போராடி வருகின்றனர். கல்வி, வேலைவாய்ப்பில் தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்றும் இவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இப்பிரச்சினை குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் மாநில ஆளுநரை சந்தித்து மனு கொடுத்தனர். மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி, அரசியல் கட்சி தலைவர்கள் கிராமத்திற்குள் நுழையக்கூடாது என கிராமத்தினர் தடை விதித்துள்ளனர்.

இந்தநிலையில், மராத்தா இட ஒதுக்கீடு போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் பீட் மாவட்டத்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ பிரகாஷ் சோலங்கேவின் வீட்டில் போராட்டக்காரர்கள் இன்று தீ வைத்துள்ளனர். நல்வாய்ப்பாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை. மனோஜ் ஜரங்கே பாட்டீலின் உண்ணாவிரதப் போராட்டம் குறித்து இவரது கருத்துகளால் கோபமடைந்த போராட்டக்காரர்கள் இந்த வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து தேசியவாத காங்கிரஸ் எம்.பியும் அதன் தலைவர் சரத்பவாரின் மகளுமான சுப்ரியா சுலே கூறுகையில், "இது மகாராஷ்டிராவில் டிரிபிள் என்ஜின் அரசின் தோல்வி. இன்று ஒரு எம்.எல்.ஏ வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இங்கு என்ன நிலைமை ஏற்பட்டாலும் அதற்கு மகாராஷ்டிரா அரசு பொறுப்பு ஏற்க வேண்டும். மராத்தா, தங்கர், லிங்காயத் மற்றும் முஸ்லிம் சமூகங்களை பாஜக ஏமாற்றி வருகிறது. இது மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் மற்றும் அரசின் முழுமையான தோல்வியாகும்" என்று குற்றம்சாட்டினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in