20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முன்னாள் எம்எல்ஏ நேபாள எல்லையில் சிக்கினார்!

20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முன்னாள் எம்எல்ஏ நேபாள எல்லையில் சிக்கினார்!

இருபது ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிஹார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரஞ்சன் திவாரி, இந்தியா-நேபாள எல்லைக்கு அருகிலுள்ள ரக்சௌல் எனும் இடத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.1998ம் ஆண்டு காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காக உத்தரப் பிரதேச காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளியான ரஞ்சன் திவாரியை கண்டுபிடிப்பவர்களுக்கு ரூ. 25,000 பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த அவரை உத்தரபிரதேசம் மற்றும் பிஹார் போலீஸ் படைகளின் கூட்டுக் குழு கைது செய்தது.

இது தொடர்பாக பேசிய கிழக்கு சம்பாரண் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் குமார் ஆஷிஷ், “பிஹார் மாநிலத்தின் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள கோவிந்த்கஞ்ச் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ ரஞ்சன் திவாரி, உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் காவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பான வழக்கில் 1998 முதல் தேடப்பட்டு வந்தார். அவர் சுமார் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். அவரை தற்போது ரக்சௌல் பகுதியில் கைது செய்துள்ளோம். முதற்கட்ட சம்பிரதாயங்கள் முடிந்ததும் அவர் வழக்கு விசாரணைக்காக உ.பி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். பீகாரில் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் நாங்கள் விசாரித்து வருகிறோம்" என்று கூறினார்.

ரக்சௌல் நகரில் இருந்து எல்லைப்பகுதியின் வழியாக நேபாள தலைநகர் காத்மாண்டுக்கு தப்பிச் செல்ல ரஞ்சன் திவாரி திட்டமிட்டிருந்தார் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in