
தாயை வீட்டை விட்டு அடித்து விரட்டிய தந்தையை, 16 வயது மகன் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்தேறி இருக்கிறது.
ஜார்கண்ட் மாநிலம் பாலமு மாவட்டத்தில் உள்ளது பக்ரியா. இங்கு வசிக்கும் சோட்டு சர்மா என்ற 42 வயது நபர், சொந்த மகனால் புதன் அன்று குத்திக் கொலை செய்யப்பட்டார். அவர் கொலையாவதற்கு முன்தினம், 16 வயது மகன் எதிரே மனைவியை மூர்க்கமாக தாக்கி சித்திரவதை செய்துள்ளார். மகன் எத்தனையோ முறை கதறி அழுதும், கெஞ்சிக் கேட்டும் அந்த தந்தை மனம் இரங்கவில்லை.
குடும்ப சண்டையின் பெயரில் வழக்கமாக மனைவியிடம் கோபம் காட்டும் சோட்டு சர்மா அன்றைய தினம் எல்லை மீறினார். தோளுக்கு வளர்ந்த ஆண் பிள்ளையை வீட்டில் வைத்துக்கொண்டு, அவனது தாயை அடித்து துன்புறுத்தினார். இது சிறுவனின் மனதை வெகுவாக பாதித்தது. அன்றைய சண்டையின் உச்சமாக, மனைவியை வீட்டைவிட்டே சோட்டு சர்மா அடித்து விரட்டினார்.
தாயை காப்பாற்ற வழியின்றி, கையாலாகாத சூழல் மற்றும் மன அழுத்தத்தில் வெகுவாய் குமைந்த சிறுவன், மறுநாள் விபரீத முடிவை எடுத்தான். வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் கத்தியை மறைத்து எடுத்துச்சென்று, தந்தை எதிர்பாரா தருணத்தில் பல முறை குத்தி அவரை சாய்த்தான்.
சோட்டு சர்மாவின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்து வந்தவர்கள் ஓடோடி வந்தார்கள். அமைதியின் சொரூபமாக அவர்கள் அதுவரை பார்த்திருந்த சோட்டு சர்மா மகனை, கத்தியும் கையுமாக கொலைவெறியோடு அன்று பார்த்ததும் அரண்டு போனார்கள். தந்தை இறந்ததை உறுதி செய்த பிறகே 16 வயது சிறுவன் அங்கிருந்து ஓடி மறைந்தான்.
நவஜய்பூர் போலீஸார் சோட்டு சர்மாவின் சடலத்தை கைப்பற்றி, தலைமறைவான அவரது 16 வயது மகனை தேடி வருகின்றனர். கணவனால் அடித்து விரட்டப்பட்டதில், செயின்பூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்ற, சோட்டு சர்மாவின் மனைவி நடந்த சம்பவம் குறித்து அறிந்ததும் திக்பிரமையில் ஆழ்ந்திருக்கிறார்.
இதையும் வாசிக்கலாமே...
வில்வித்தை போட்டியில் கை இல்லாத இந்திய வீராங்கனை ஷீத்தல் தங்கம் வென்று சாதனை
நீட் விலக்கு மசோதா... நேரடியாக குடியரசுத் தலைவரிடமே முதல்வர் வலியுறுத்தல்!
3 அடி உயரம்... 250 கிலோ எடை... ரஜினிக்கு சிலை அமைத்து குடும்பத்துடன் வழிபடும் ரசிகர்!
5 வருடமாக படுத்தப் படுக்கையாக இருக்கும் பிரபல இயக்குநரின் மனைவி... கண்டுகொள்ளாத திரையுலகம்!
நவம்பர் மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை... பணிகளை முன்பே திட்டமிடுங்க!