10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்... ட்யூஷன் ஆசிரியையின் தந்தை உட்பட இருவர் கைது

சிறுமி பாலியல் பலாத்காரம்
சிறுமி பாலியல் பலாத்காரம்

10 வயது சிறுமியை தொடர் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கிய, ட்யூஷன் ஆசிரியையின் தந்தை உட்பட 2 பேரை ஒடிசா போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஒடிசா மாநிலம் குஜாங் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பாலிதுதாவில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இங்குள்ள பெண் ஆசிரியரிடம் சுமார் 20 மாணவ மாணவியர் ட்யூஷனுக்கு சென்று வருகின்றனர். இவர்களில் அதே பகுதியை சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமியும் அடங்குவார்.

சிறுமி பலாத்காரம்
சிறுமி பலாத்காரம்

ட்யூஷன் ஆசிரியையின் தந்தையான சுபாஷ் முதுலி என்ற 52 வயது நபர், அவ்வப்போது மகளின் ட்யூஷன் வகுப்புகளுக்கு ஒத்தாசையாக செயல்படுவார். மகள் இல்லாதபோது சுபாஷ் முதுலியே ட்யூஷன் வகுப்புகளையும் எடுப்பார்.

அவ்வாறு ட்யூஷன் வகுப்புகளை கையாண்டு வந்த சுபாஷ் முதுலி, 10 வயது சிறுமி மீது கண் வைத்தார். பாடங்களை தனியாக சொல்லித் தருவதாக அழைத்துச் சென்று, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அதனை வெளியே சொல்லக் கூடாது என்று சிறுமியை மிரட்டியும் வைத்திருக்கிறார்.

இவ்வாறு ட்யூஷன் ஆசிரியை இல்லாத நாட்களில் 10 வயது சிறுமியை குறிவைத்து சீரழித்திருக்கிறார். அண்மையில் சிறுமி அடிவயிற்று வலி என துடித்ததில், சிறுமியை அவரது தந்தை அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே சிறுமியை பரிசோதித்த பெண் மருத்துவர், பாலியல் பலாத்கார தாக்குதலுக்கு சிறுமி ஆளானதை கண்டறிந்தார்.

சிறுமி பலாத்காரம்
சிறுமி பலாத்காரம்

சிறுமியிடம் பேசி விவரங்களை கேட்டறிந்த பெண் மருத்துவர் அதனை சிறுமியின் தந்தையிடம் தெரிவிக்க, குஜாங் காவல் நிலையத்தில் புகாராக அது பதிவானது. உடனடியாக ட்யூஷன் ஆசிரியையின் தந்தையான சுபாஷ் முதுலியை கைது செய்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது கிடைத்த தகவலின் அடிப்படையில், சுபாஷ் முதுலியின் பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததாக, அவரது உதவியாளரான ரவீந்திர தாஸ் என்ற 50 வயது நபரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பெண் போலீஸார் வாக்குமூலம் பெற்றதோடு, விரிவான மருத்துவ பரிசோதனைக்காக மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


வில்வித்தை போட்டியில் கை இல்லாத இந்திய வீராங்கனை ஷீத்தல் தங்கம் வென்று சாதனை

நீட் விலக்கு மசோதா... நேரடியாக குடியரசுத் தலைவரிடமே முதல்வர் வலியுறுத்தல்!

3 அடி உயரம்... 250 கிலோ எடை... ரஜினிக்கு சிலை அமைத்து குடும்பத்துடன் வழிபடும் ரசிகர்!

5 வருடமாக படுத்தப் படுக்கையாக இருக்கும் பிரபல இயக்குநரின் மனைவி... கண்டுகொள்ளாத திரையுலகம்!

நவம்பர் மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை... பணிகளை முன்பே திட்டமிடுங்க!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in