அதிர்ச்சி... மலைப்பாதையில் மோதி அந்தரத்தில் தொங்கிய மினி லாரி!

அந்தரத்தில் தொங்கியபடி நிற்கும் மினி லாரி
அந்தரத்தில் தொங்கியபடி நிற்கும் மினி லாரி
Updated on
1 min read

ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் லாரி மீது மோதிய மினி லாரி  ஒன்று அந்தரத்தில் தொங்கியபடி நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த  திம்பம் மலைப்பாதை குறுகலான 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. இந்த மலைப்பாதை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள்  சென்று வருகின்றன. கனரக வாகனங்கள் செல்லும்போது குறுகலான வளைவுகளில் திரும்ப முடியாமல் பழுதாகி நிற்பதும், கவிழ்ந்து விபத்துக்குள்ளாவதும் தொடர் நிகழ்வுகளாகி  வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய மினி லாரி ஒன்று தனியார் சர்க்கரை ஆலைக்கு சென்று கொண்டிருந்தது. லாரியை தாளவாடியை  சேர்ந்த ஆறுமுகசாமி என்பவர் ஓட்டினார்.  மலைப்பாதையின் 20-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது, கரும்பு பாரம் ஏற்றிய மற்றொரு லாரி ஒன்று மினி லாரி மீது மீது மோதியது. 

திம்பம் மலைப்பாதை
திம்பம் மலைப்பாதை

இந்த விபத்தில் நிலைகுலைந்த  மினி லாரி மலைப்பாதையின் ஓரத்துக்கு சென்று தடுப்புச்சுவரை இடித்துக்கொண்டு பள்ளத்தை நோக்கி சென்றது. ஆனாலும் அதிர்ஷ்டவசமாக பள்ளத்தில் கவிழாமல்  அந்தரத்தில் தொங்கியபடி நின்றுவிட்டது. மினி லாரியின் ஓட்டுநர் உடனடியாக மினி லாரியிலிருந்து குதித்து  காயமின்றி உயிர் தப்பினார்.  

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு சென்று ஆசனூர் போலீஸார் போக்குவரத்தை சீர் செய்ததுடன்  இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று மகாளய அமாவாசை... இதைச் செய்தால் கடன் தொல்லைத் தீரும்!

இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000... திட்டத்தை உடனே நிறுத்தச் சொல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

பேச மறுத்த காதலி... வெறித்தனமாய் 13 முறை கத்தியால் குத்திய காதலன்!

தங்கம் விலை அதிரடியாக உயர்வு... சவரனுக்கு ரூ.360 உயர்ந்தது!

இன்று வானில் வர்ணஜாலம்... நெருப்பு வளையத்திற்குள் நிகழப்போகும் அற்புதம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in