ஆம் ஆத்மி மீது அடுத்த அட்டாக்... சிறையிலுள்ள அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மீது சிபிஐ விசாரணைக்கு அனுமதி

திகார் சிறையிலிருக்கும் சத்யேந்திர ஜெயின் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட கோப்பு படம்
திகார் சிறையிலிருக்கும் சத்யேந்திர ஜெயின் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட கோப்பு படம்

திஹார் சிறையில் தற்போது இருக்கும், ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு எதிராக சிபிஐ விசாரணை மேற்கொள்ள இன்று உள்துறை அமைச்சகம் உரிய அனுமதி வழங்கி உள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு அதன் காவலில் விசாரணைக்கு ஆளாகி உள்ளார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையின் அடுத்தடுத்த சம்மன்களை தவிர்த்து வந்த அரவிந்த் கேஜ்ரிவால் இறுதியாக அதன் விசாரணை மற்றும் கைதுக்கு ஆளாகி உள்ளார்.

சுகேஷ் சந்திரசேகர் - சத்யேந்திர ஜெயின்
சுகேஷ் சந்திரசேகர் - சத்யேந்திர ஜெயின்

இதனிடையே மோசடி வழக்கு ஒன்றில் ஏற்கனவே கைதாகி சிறையில் இருக்கும் ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ தனது விசாரணையை அதிகாரபூர்வமாக தொடங்க இருக்கிறது. இதற்கான அனுமதியை உள்துறை அமைச்சகம் இன்று வழங்கியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் தலைமை முதல் தளகர்த்தாக்கள் வரை அடுத்தடுத்து பாயும் மத்திய விசாரணை அமைப்புகளால் அக்கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர்.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து 10 கோடி ரூபாய் தொகையை மிரட்டிப் பறித்த குற்றச்சாட்டின் கீழ், ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்பட்டார். தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு எதிராக சிபிஐ விசாரணைக்கு உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

கேஜ்ரிவால் - சத்தியேந்திர ஜெயின்
கேஜ்ரிவால் - சத்தியேந்திர ஜெயின்

முன்னதாக சத்யேந்திர ஜெயின் மீதான விசாரணைக்கு அனுமதி வழங்குவதற்கான, சிபிஐயின் முன்மொழிவை உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அனுப்பி வைத்திருந்தார். இதன் அடிப்படையில், அதற்கான அனுமதியை அமைச்சகம் இன்று வழங்கியுள்ளது.

அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராக இருந்த ஜெயின், 2022 மே மாதம் பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 2017-ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது சிபிஐ பதிவு செய்த எஃப்ஐஆர் அடிப்படையில் ஜெயின் கைதானது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் அமலாக்கத்துறையை அடுத்து சிபிஐ விசாரணையும் சத்யேந்திர ஜெயின் மீது பாய உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...    

காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த அதிர்ச்சி... ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ்!

அதிர்ச்சி... மாமியாரை தரதரவென இழுத்துச் சென்று குப்பைக் கிடங்கில் போட்ட மருமகள்!

பகீர்... ஒரே இடத்தில் 60 பசுக்கள் கொலை...10,000 கிலோ இறைச்சி பறிமுதல்!

கோயிலுக்கும், மசூதிக்கும் ஒரே பெயர் பலகை; கெத்து காட்டும் குடியிருப்புவாசிகள்!

திட்டமிட்டு கொல்லப்பட்டாரா முக்தார் அன்சாரி; மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in