
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், அடுத்தடுத்து 2 லாரிகள் மீது கார் மோதிய விபத்தில், மருத்துவக்கல்லூரி மாணவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய சம்பவம் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், பட்டூர் சாலப்பாளையம் குடித்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் யுவராஜ், திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில், எம்.எஸ் 2ம் ஆண்டு பயின்று வந்துள்ளார். யுவராஜ் தனது சொந்த வேலையாக திருச்சியிலிருந்து பெரம்பலூருக்கு தனியாக காரில் சென்றுள்ளார். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கூத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற சிமென்ட் லாரியை வேகமாக முந்திச் செல்ல முயற்சித்துள்ளார். இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற சிமென்ட் லாரி மீது மோதியதோடு, அருகில் சென்ற மற்றொரு லாரியின் மீது மோதி விபத்திற்கு உள்ளானது.
இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. ஆனால் நல்வாய்ப்பாக, காரை ஓட்டிச் சென்ற யுவராஜ், சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கொள்ளிடம் காவல்துறையினர், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் நடவடிக்கை எடுத்ததோடு, விபத்தில் சிக்கிய வாகனங்களை அகற்றும் பணியிலும் ஈடுபட்டனர். மேலும் யுவராஜை மீட்டு, அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
முற்றுகிறது மோதல்... பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக பொன்முடி அறிவிப்பு!
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!
பட்டத்து இளவரசியாக முடிசூடினார் 18 வயது லியோனார்!
தீபாவளிக்கு தெறிக்கப் போகுது... மதுப் பிரியர்கள் உற்சாகம்; நவ.10 முதல் புதிய ‘பீர்’ வகைகள் அறிமுகம்!