மானாமதுரை: அக்காவை கழுத்தறுத்துக் கொன்ற தம்பி!

மானாமதுரை கொலை
மானாமதுரை கொலை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் காலனியை சேர்ந்தவர் ராமு. இவர் அதே பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு தேவயானி(23) என்ற மகளும் கண்ணன் என்ற மகனும் உள்ளனர். தேவயானி பி.எட் முடித்த நிலையில், வீட்டில் இருந்தபடியே ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தயாராகி வந்தார். கண்ணன் தனது தந்தைக்கு உதவியாக கறிக்கடையை கவனித்து வந்துள்ளார்.

மானாமதுரை கொலை
மானாமதுரை கொலை

இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்குள் தேவயானியை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து, அவரே போலீஸுக்கு போன் செய்து தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாரை பார்த்ததும், கண்ணன் தப்பியோட முயற்சித்துள்ளார். அவரை மடக்கிப்பிடித்த போலீஸார், கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

தேவயானியின் சடலத்தை மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கண்ணன் எதற்காக அக்காவை கழுத்தறுத்து கொன்றார் என்பது குறித்து மானாமதுரை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மானாமதுரையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in