இன்பார்மராக நடித்து காவல் துறை அதிகாரிகளிடம் பணம் பறிப்பு: 4 ஆண்டுகளாக ஏமாற்றிய வாலிபர் கைது!

 கைது செய்யப்பட்ட வாசிம்
கைது செய்யப்பட்ட வாசிம்

பெங்களூருவில் போலீஸ் இன்பார்மர் போல நான்கு ஆண்டுகளாக ஏமாற்றி பத்துக்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகளிடம் பணத்தைப் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்பார்மர்
இன்பார்மர்

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் செயின் பறிப்பு மற்றும் பிற குற்றங்களில் ஈடுபட்டவர்கள் குறித்த தகவல்களைத் தருவதாக பத்துக்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகளை ஏமாற்றிய பலே ஆசாமி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக அவர், குற்றச் செயல்கள் குறித்த தகவல்களைத் தருவதாக் கூறி அதிகாரிகளிடம் பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது. அத்துடன் காவல் துறையினரை ஏமாற்றுவதற்காக வேறு அடையாளங்களை வைத்து ஆள்மாறாட்டமும் செய்தது தெரிய வந்தது.

கைது
கைது

இதுகுறித்து பெங்களூரு மத்திய துணை காவல் ஆணையர் ஆர்.ஸ்ரீனிவாஸ் கவுடா கூறுகையில்," செயின்பறிப்பு உள்ளிட்ட குற்றங்கள் குறித்து தகவல் கொடுப்பதாக் கூறி காவல் அதிகாரிகளை ஏமாற்றிய வாசிம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில் அவர் பத்துக்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகளை ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.

அவரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இன்று கைது செய்து சுத்தன்பேட்டை காவல் நிலையத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இந்த குற்றத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகிறோம்" என்றார்.

நான்கு ஆண்டுகளாக போலீஸ் இன்பார்மர் போல நடித்து பத்துக்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகளிடம் பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in