மெட்ரோ ரயிலில் சாப்பிட்ட பயணிக்கு அபராதம்; நண்பர்களால் வந்த சோதனை

மெட்ரோ ரயிலில் சாப்பிட்ட பயணி
மெட்ரோ ரயிலில் சாப்பிட்ட பயணி

மெட்ரோ ரயிலில் பயணித்தபோது சாப்பிட்ட பயணிக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் விதிமுறைப்படி ரயில் அல்லது நடைமேடைகளில் சாப்பிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் சுனில்குமார் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜெயநகரில் உள்ள அவர்களது பணியிடத்திற்குச் செல்வதற்காக, தினமும் சாம்பிகே சாலையில் இருந்து மெட்ரோவில் சென்று வருகிறார். அப்போது மெட்ரோ ரயிலில் சுனில்குமார் உணவு சாப்பிட்டுள்ளார். இதை அவரது நண்பர்கள் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் இதை சுனில் குமார் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

இதைதொடர்ந்து சுனில்குமார் மீது பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் ஜெயநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தது. இதையடுத்து ஜெயநகர் போலீசார் சுனில்குமார் மீது வழக்குப்பதிவு செய்து, அவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in