தீயில் இருந்து தப்ப 4வது மாடியில் இருந்து குதித்த நபர்
தீயில் இருந்து தப்ப 4வது மாடியில் இருந்து குதித்த நபர்

பெங்களூருவில் அதிர்ச்சி... பற்றி எரிந்த வணிக வளாகம்; 4வது மாடியில் இருந்து குதித்து தப்பிய நபர்

பெங்களூருவில் தீப்பிடித்து எரிந்த கட்டிடத்திலிருந்து தப்புவதற்காக 4வது மாடியில் இருந்து வாலிபர் ஒருவர் குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு நகரின் கோரமங்களா பகுதியில் அடுக்குமாடி வணிக வளாகம் ஒன்றில் ஏராளமான கடைகள் இயங்கி வருகின்றன. இன்று திடீரென 4வது மாடியில் செயல்பட்டு வந்த தேநீர் விடுதி ஒன்றில் திடீரென தீ பிடித்தது. மளமளவென பரவிய தீ, 4வது மாடி முழுவதும் பற்றி எரியத் துவங்கியது. இதே கட்டிடத்தில் கார் ஷோரூம் ஒன்றும் உடற்பயிற்சி நிலையம் ஒன்றும் செயல்பட்டு வரும் நிலையில், அங்கிருந்தவர்கள் உயிரை காத்துக்கொள்ள அலறி அடித்து ஓடினர். இதனிடையே தீப்பிடித்த போது தேநீர் விடுதியில் இருந்த ஒரு நபர் பாதுகாப்பிற்காக 4வது மாடியின் ஓரத்தில் சென்று நின்றுள்ளார்.

பெங்களூருவில் வணிக வளாகத்தில்   தீவிபத்து
பெங்களூருவில் வணிக வளாகத்தில் தீவிபத்து

தீ கட்டுக்குள் வரும் என அவர் எதிர்பார்த்த நிலையில் மேலும் மேலும் பரவியதால், தனது உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேறு வழியின்றி 4வது மாடியில் இருந்து அவர் கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த காட்சிகளை எதிரில் இருந்த கட்டிடத்தில் இருந்து ஒருவர் பதிவு செய்த நிலையில், அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

4வது மாடியில் தீப்பிடித்ததால் சிக்கிய நபர் அச்சத்தில் கீழே குதித்தார்
4வது மாடியில் தீப்பிடித்ததால் சிக்கிய நபர் அச்சத்தில் கீழே குதித்தார்

தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர தீவிரமாக போராடி அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்துள்ள போலீஸார் தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டிடத்தில் இருந்து குதித்த நபர் படுகாயமடைந்துள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in