சக பயணிகளுடன் தகராறு... இருக்கைகள் சேதம்... ஆகாய விமானத்தில் அழிச்சாட்டியம் செய்தவர் கைது!

விமானம்
விமானம்

சர்வதேச விமானத்தில் சக பயணிகளுடன் தகராறு செய்து, இருக்கைகளுக்கு சேதம் விளைவித்த இந்திய பயணியை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஞாயிறு அன்று எகிப்து தேசம் கெய்ரோவிலிருந்து அந்நாட்டின் சர்வதேச விமானம் ஒன்று டெல்லி நோக்கி பயணத்தை தொடங்கியது. நள்ளிரவில் ஆகாய விமானம் பறக்கும்போது, ஆண் பயணி ஒருவர் சக பயணிகளிடம் முறைகேடாக நடந்துகொண்டதாக புகார் எழுந்தது.

சக பயணிகளின் புகாரை அடுத்து, விமான சிப்பந்திகள் அந்த பயணியை தட்டிக்கேட்டனர். ஆனால் அதன் பிறகும் அடங்காத அந்த பயணி விமானத்தின் இருக்கைகளை அடித்து, உடைத்து ஆர்ப்பாட்டம் செய்தார். இதனால் சக பயணிகள் மத்தியில் அச்சமும், அமைதியின்மையும் ஏற்பட்டது.

விமானத்தில் பயணிகள்
விமானத்தில் பயணிகள்

இந்த சம்பவம் தொடர்பாக எகிப்து விமானத்தின் விமானி, டெல்லி தரை கட்டுப்பாட்டு மையத்தை தொடர்புகொண்டு முறையிட்டார். அதிகாலை டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை விமானம் எட்டியதும், விமான நிலைய பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் அதிரடியாக விமானத்தில் புகுந்தனர்.

அதுவரை ரகளையில் ஈடுபட்டு வந்த இந்திய பயணியை விமான நிலையத்துக்கு அள்ளி வந்தனர். தங்களது விசாரணை நடைமுறைகள் முடித்ததும், டெல்லி காவல்துறையினரை அழைத்து ஆண் பயணியை ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து அந்த பயணியை கைது செய்த டெல்லி போலீஸார், அவரது பின்னணி குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு வந்தாச்சு... டிசம்பர் 3-ல் வாக்கு எண்ணிக்கை!

புதிய மதுக்கடைகள் திறக்கவேண்டும்... முதல்வருக்கு அழுத்தம் கொடுக்கும் எம்எல்ஏக்கள்!

‘இஸ்ரேலில் நடக்கும் படுகொலைக்கு உடனே குரல் கொடுக்கும் மோடி, மணிப்பூர் பிரச்சினையில் மவுனம் காப்பது வெட்கக்கேடு’

பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு திடீரென வெளியேறிய பவா செல்லதுரை... புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னையில் சோகம்: பயிற்சியின் போது ஜிம் பயிற்சியாளர் மாரடைப்பால் மரணம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in