இளம்பெண்ணால் விபரீதம்... இன்ஸ்டாகிராம் நேரலையில் தற்கொலை செய்துகொண்ட 2 குழந்தைகளின் தந்தை!

தோழியை பிரிந்ததால் துயரம்?
தோழியை பிரிந்ததால் துயரம்?

திருமணத்துக்கு அப்பால் உறவிலிருந்த தோழியை பிரிந்த துயரத்தால், 2 குழந்தைகளின் தந்தை ஒருவர் இன்ஸ்டாகிராம் லைவ் காட்சியில் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கிறார்.

ஹரியானா மாநிலம் கூர்கானில் வசிப்பவர் விக்ரம். மருந்தியல் துறையில் வர்த்தகம் செய்து வரும் இவர், அதே துறையில் பகுதி நேர மேற்படிப்பு ஒன்றையும் மேற்கொண்டு வருகிறார். திருமணமாகி 2 குழந்தைகளின் தந்தையாக இருக்கும் விக்ரம், உடன் பயிலும் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த 20 வயது பெண்ணுடன் நெருங்கி பழகியிருக்கிறார்.

ஞாயிறு அன்று மாலை அந்த தோழியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் விக்ரம் அறையெடுத்திருக்கிறார். ஆனால் அறையில் நுழைந்த சில மணி நேரங்களில் இருவருக்கும் இடையே ஏதோ தகராறு எழுந்திருக்கிறது. இதனால் அந்தப் பெண் கோபத்துடன் அங்கிருந்து வெளியேறி இருக்கிறார்.

தோழியை பிரிந்த துயரத்தில் மேலும் அரை மணி நேரம் காத்திருந்த விக்ரம், பின்னர் இன்ஸ்டாகிராம் லைவ் காட்சியில் தோன்றினார். நேரலை என்றதும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர், நண்பர்கள் பலரும் ஆர்வத்துடன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குவிந்தனர்.

இன்ஸ்டாகிராம்
இன்ஸ்டாகிராம்

அவர்களிடம் எதுவும் பேசாது, எந்தக் கருத்தையும் பதிவிடாத விக்ரம், மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இன்ஸ்டாகிராம் லைவ் காட்சியில் துள்ளத்துடிக்க நேர்ந்த தற்கொலை சம்பவம் கூர்கானை உலுக்கியது. உறவினர்கள் மற்றும் காவல்துறையினர் விரைந்து சென்று கெஸ்ட் ஹவுஸை அடைந்தபோது, விக்ரம் அங்கே இறந்திருந்தார்.

விக்ரமின் மனைவி நீரு, கணவனின் தற்கொலைக்கு காரணம் என 20 வயது மாணவியை குற்றம்சாட்டி இருக்கிறார். திருமணமான நபர் என்று அறிந்தும் அந்தப் பெண் விக்ரமுடன் நெருங்கிப் பழகியதாகவும், வீடியோ ஒன்றைக் காட்டி விக்ரமை பிளாக் மெயில் செய்து வந்ததாகவும் நீரு புகார் அளித்திருக்கிறார்.

இந்த புகாரின் அடிப்படையில் தலைமறைவான மாணவி மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து அவரை போலீஸார் தேடி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் நேரலை காட்சியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது ஹரியானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in