மரித்துப் போனதா மனிதநேயம்?... 5 மணி நேரமாக ரயில் நிலையத்தில் கிடந்த சடலம்!

ரயில் நிலையத்தில் பயணிகள் முன்னிலையில் கிடந்த சடலம்
ரயில் நிலையத்தில் பயணிகள் முன்னிலையில் கிடந்த சடலம்

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இறந்துகிடந்த ஒருவரின் உடல், கடந்த 5 மணி நேரத்திற்கும் மேலாக அகற்றப்படாமல், கேட்பாரற்று அப்படியே கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டர் அருகே இன்று காலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்து கிடந்தார். இது தொடர்பாக ரயில்வே போலீஸாருக்கும், செங்கல்பட்டு நகர போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் எல்லை பிரச்சினை காரணமாக உடலை மீட்க 2 காவல் நிலைய போலீஸாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக 5 மணி நேரத்திற்கு மேலாக சடலம் அங்கேயே கிடந்தது.

செங்கல்பட்டு சந்திப்பு
செங்கல்பட்டு சந்திப்பு

இதனிடையே, ரயிலில் பயணிப்பதற்காக ஏராளமான பயணிகள் வரிசையில் நின்று டிக்கெட்டுகளைப் பெற்று வருகின்றனர். அந்த இடத்தில், உயிரிழந்தவரின் உடல் மீது துணி கூட போர்த்தப்படாமல், கிடத்தி வைக்கப்பட்ட சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுபோன்ற சம்பவங்களை கையாள மருத்துவக்குழு ஒன்றை, ரயில்வே துறை ஏற்படுத்த வேண்டும் என பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரயில் நிலையம்
ரயில் நிலையம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in