கேரளாவில் 5 வயது சிறுமியை வன்புணர்வு செய்து கொலை செய்த குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதித்து எர்ணாகுளம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
கேரள மாநிலம் ஆளுவாவில் கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி, வட மாநில தம்பதியின் 5 வயது மகள் திடீரென மாயமானார். இது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில், கடைக்கு சென்ற சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த வடமாநில வாலிபர் ஒருவர் குளிர்பானம் வாங்கி கொடுத்து அழைத்து சென்றது அங்கிருந்து சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்தது.
இதையடுத்து அந்த காட்சிகளை தொடர்ந்து ஆய்வு செய்த போலீஸார் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அசாஃப்க் ஆலம் என்பவனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி அவரை கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி தூக்கி வீசியதாக ஆலம் கூறியதால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய சோதனையில் அருகில் இருந்த மார்க்கெட் கழிவுகள் கொட்டும் இடத்தில் சிறுமி சாக்கு முட்டையில் சடலமாக மீட்கப்பட்டார்.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் 30 நாட்களில், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை துரிதமாக நடைபெற்று வந்த நிலையில் சிறுமியை கடத்தி வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளி ஆலமுக்கு தூக்குத் தண்டனை விதித்து எர்ணாகுளம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த வழக்கில் 26 நாட்களில் விசாரணை முடிக்கப்பட்டு, 30 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, குற்றம் நடந்த 110வது நாளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
HBD Mamta Mohandas|புற்றுநோய் தந்த பயமும்...விட்டிலிகோ தந்த நம்பிக்கையும்!
காதலை ஏற்க காதலன் குடும்பம் மறுப்பு… காதலி மர்மமான முறையில் மரணம்!
உஷார்; தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் கனமழை: ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை அவசர கடிதம்!
அதிர்ச்சி: தாத்தா ஓட்டிய காரின் சக்கரத்தில் சிக்கி 2வயது குழந்தை பலி!