பூட்டியிருந்த அலுவலகத்துக்குள் புகுந்து ரூ.42 லட்சம் திருட்டு... காயலான் கடை உரிமையாளர் கைது!

சக்திவேல்
சக்திவேல்

பூட்டியிருந்த வணிக நிறுவனத்திற்குள், ஜன்னல் வழியாக நுழைந்து, 42 லட்சம் ரூபாயைத் திருடிய, காயலான் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பணம்
பணம்

சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் வசிப்பவர் ஜேக்கப்(67). இவர், எழுதுபொருள் உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனம், கட்டுமான நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வருகிறார்.இந்நிறுவனங்களின் தலைமையிடம், கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தனியார் அடுக்குமாடி கட்டடத்தில் இயங்கி வருகிறது.

கடந்த 21-ம் தேதி, தலைமை அலுவலத்தில் ஆயுத பூஜை கொண்டாடப் பட்டது. அதற்குப்பின், இரவு அலுவலகம் மூடப்பட்டது. மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின், 24-ம் தேதி அலுவலகம்  மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது அறையில் வைத்திருந்த, 42 லட்சம் ரூபாய் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்து, ஜேக்கப் கீழ்ப்பாக்கம் போலீஸில் புகார் அளித்தார். 

திருட்டு
திருட்டு

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை செய்து வந்தனர். அப்பகுதி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதே பகுதியில் காயலான் கடை நடத்தி வரும், தண்டையார் பேட்டையைச் சேர்ந்த சக்திவேல் (57) என்பவர், அந்த நிறுவனத்துக்கு வந்து சென்றது அதன் மூலம் தெரியவந்தது.  அதையடுத்து சந்தேகத்தின் பேரில் நேற்று அவரை காவல் நிலையம் அழைத்துவந்து விசாரித்தனர்.

அப்போது, அவர்  கடந்த 22-ம் தேதி அலுவலத்திற்கு வந்ததும்,  ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து, பணத்தை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து, சக்திவேலை கைது செய்து, அவரிடம் இருந்து 41,88,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும் சக்திவேலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in