சமூக வலைதளத்தில் ஸ்டாலின்,கனிமொழி குறித்து அவதூறு.... கத்தார் ரிட்டர்ன் கைது!

வேலு முருகானந்தம்.
வேலு முருகானந்தம்.

சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக எம்.பி கனிமொழி குறித்து அவதூறான கருத்துகளை பதிவிட்ட கோவையைச் சேர்ந்தவரை போலீஸார் கைது செய்தனர்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த சம்பத்( பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி சென்னை காவல் ஆணையர் உள்ள மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸில் புகார் ஓன்றை அளித்துள்ளார்..

அதில் @ananthamharshi என்ற எக்ஸ் (ட்விட்டர்) கணக்கிலிருந்து தமிழக முதல்வர் மற்றும் மக்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோருக்கு எதிராக ஆட்சேபகரமான வார்த்தைகளை தொடர்ச்சியாக பதிவிட்டுள்ளதாகவும் அந்த நபரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

அப்புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் @ananthamharshi என்ற எக்ஸ் கணக்கின் விபரங்களைக் கேட்டு அந்த நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பி ஐ.பி விவரங்களை பெற்றனர்.

அதனைத் தொடர்ந்து ஐ.பி பயனாளர் விவரங்களை பகுப்பாய்வு செய்து கிடைத்த செல்போன்  எண்ணை வைத்து கோவை மாவட்டம், ராமநாதபுரத்தைச் சேர்ந்த  வேலு முருகானந்தம் (54) என்பவரை சென்னை சைபர் கிரைம் தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர். கத்தாரில் இருந்து சமீபத்தில் தான் அவர் ஊருக்கு வந்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்து செல்போன் ஓன்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை சென்னை எழும்பூர் கூடுதல் குற்றவியல் நடுவர் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் சமூக ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான தவறான செய்திகளை அதன் நம்பகதன்மையை சரிபார்க்காமல் பதிவிடவோ அல்லது பகிரவோ வேண்டாம் என்று பொதுமக்களை போலீஸார் கேட்டுள்ளனர்.

சைபர் குற்றங்கள் தொடர்பாக ஏதேனும் புகார்கள் அல்லது சந்தேகங்கள் இருப்பின் ஆன்லைனில் தேசிய சைபர் கிரைம் Reporting Portal www.cybercrime.gov.in என்ற இணையதளம் வாயிலாக புகார் அளிக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in