சிறையில் உள்ள ரவுடிகளுக்கு ரயிலில் கஞ்சா கடத்தல்... போலி எஸ்.ஐ கைது!

கஞ்சாவுடன் கைதான அப்துல் முகீத்
கஞ்சாவுடன் கைதான அப்துல் முகீத்

சேலம் அருகே கஞ்சா கடத்தி வந்த வாலிபரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, போலி எஸ்.ஐ அடையாள அட்டை வைத்து, பலரிடம் மிரட்டி பணம் பறித்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த வாலிபரிடம் போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பெயரில் தன்பாத் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில், 5 கிலோ கஞ்சாவுடன் தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியைச் சேர்ந்த அப்துல் முகீத் (24) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையின் போது, போலி எஸ்.ஐ அடையாள அட்டை இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸார் அவரிடம் கேட்டபோது, போலி அடையாள அட்டையை வைத்துக்கொண்டு சென்னையில் பலரை மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது.

கஞ்சா (கோப்பு படம்)
கஞ்சா (கோப்பு படம்)

மேலும் இரண்டு மாதங்களுக்கு முன்பு செங்கல்பட்டில் கல்லூரி நிர்வாகம் ஒன்றை மிரட்டி சீட் வாங்க முயன்ற போது, அவர்கள் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது. சிறையில் உடனிருந்த சில ரவுடிகள், வட மாநிலங்களில் இருந்து கேரளாவிற்கு செல்லும் ரயில்களில், கஞ்சாவைக் கடத்தி வந்து கொடுத்தால், பணம் தருவதாக உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

இதற்காக அப்துல் முகீத் ஒடிசா, ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து கஞ்சாவைக் கடத்தி வந்ததும் தெரியவந்ததையடுத்து, அவரை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

செங்கல்பட்டு சிறைச்சாலை
செங்கல்பட்டு சிறைச்சாலை

இந்த வழக்கில் கஞ்சா கடத்தி வருமாறு அப்துல் முகீத்தை பயன்படுத்திய ரவுடிகளைக் கூண்டோடு பிடிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அப்துல் முகீத்துடன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவுடிகள் யார், என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

பரபரப்பு... முதல்வர் வீட்டின் மீது கல்வீச்சு!

வைரல் வீடியோ: நடுரோட்டில் டூவீலரில் காதலர்கள் சில்மிஷம்!

ஒரு நாள் பிரிட்டன் தூதரான சென்னை இளம்பெண்! குவியும் வாழ்த்துகள்!

உஷார்... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அடி தூள்... பொன்னியின் செல்வனாக கலக்கும் அஜித்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in