
சென்னையில் இரவில் நடந்து வரும் சிறுமிகள், பெண்களிடம் வழிமறித்து கண்ட இடங்களில் உடம்பில் கை வைத்து பாலியல் தொல்லை தந்த காமுகன் ஒருவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் சென்னை டி.பி.சத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்றை தந்திருந்தார். "என்னுடைய 13 வயது மகள் வீட்டின் அருகே, கடந்த வெள்ளிக்கிழமை இரவு, டியூஷன் முடித்துவிட்டு வீட்டிற்கு தனியாக திரும்பி கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், திடீரென என்னுடைய மகளை வழிமறித்து, தவறான நோக்கத்தில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தும், உடலில் பல இடங்களில் அறுவறுக்கத்தக்க வகையில் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதில் வலி தாங்க முடியாமல் எனது மகள் வீட்டிற்கு வந்து என்னிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுதார். எனவே எனது மகளிடம் தவறான நோக்கத்தில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த புகாரில் கூறியிருந்தார்.
இந்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், சம்பவம் நடந்த தெருவிற்கு சென்றார்கள். அங்கே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தார்கள். அப்போது இளைஞர் ஒருவர் பைக்கில் வருவதும், டியூஷன் சென்றுவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த சிறுமியிடம் அசிங்கமாக நடந்து கொண்டதும் அந்த கேமராவில் பதிவாகியிருந்தது.
ஆனால் இரவுநேரம் என்பதால், அந்த இளைஞரின் இருசக்கர வாகனத்தின் எண் சரியாக தெரியவில்லை. இருந்தாலும், வேறு,வேறு பகுதியில் பொருத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட கேமராக்களில், அந்த வாகனம் பதிவாகியிருக்கிறதா? என்று ஆராய்ந்தனர். இறுதியில் வாகன எண் மற்றும் சம்பந்தப்பட்ட இளைஞரையும் கண்டுபிடித்தனர்.
யோகேஸ்வரன் என்ற டிபி சத்திரம் பூஜ்ஜி தெருவை சேர்ந்த அந்த 24 வயது இளைஞர் உடனடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. இந்த யோகேஸ்வரனுக்கு 2 வருடங்களுக்கு முன்பு, திருமணம் ஆகிவிட்டதாம்.
"நசரத்பேட்டையில் 100 நாட்கள்" என்ற தொடர் நடத்தும் பிரபல டிவி நிகழ்ச்சியில் வேலைபார்த்து வந்திருக்கிறார். ஆனால் இவரது நடவடிக்கை சரியில்லாததால், அந்த வேலையிலிருந்து தூக்கிவிட்டார்கள். அதற்கு பிறகு வேறுவேலை எதுவும் கிடைக்கவில்லை. அதனால், பிரபல பைக் டாக்சி நிறுவனத்தில், கடந்த 3 மாதங்களாக டிரைவராக வேலை பார்த்து வருகிறார். ஆன்லைன் பதிவு மூலம் பைக் டாக்சியை ஓட்டி வருகிறார்.
பெரும்பாலும் இரவு நேரத்தில்தான், பைக் டாக்சியை ஓட்டி வந்துள்ளார். அந்த நேரத்தில், பணிமுடித்துவிட்டு, வரும் பெண்களிடம் இவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிலரது எண்ணுக்கு இரவு நேரத்தில் மெசேஜ் அனுப்பி நட்பாகி, இறுதியில் நெருக்கமாகி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் நள்ளிரவு நேரத்தில் தனியாக சாலையில் செல்லும் இளம்பெண்கள் பின்னாடியே சென்று, வழிமறித்து, கட்டிபிடித்து முத்தம் கொடுத்து விடுவாராம். உடலில் பல இடங்களில் தொட்டு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வாராம். கத்தி கூச்சலிட முயன்றால், இதெல்லாம் வெளியே சொன்னால், உங்களுக்குத் தான் அசிங்கம் என்று மிரட்டிவிட்டு தப்பிவிடுவாராம்.
இதில் சிறுமிகளையும் விட்டுவைக்கவில்லை. அப்படி கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சம்பவம்தான் இவரை போலீஸில் சிக்க வைத்துள்ளது. 3 மாதங்களில் 50-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் சேட்டையை நடத்தியது உறுதியானதையடுத்து, யோகேஸ்வரன் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மகளிர் போலீஸாரும் இதுகுறித்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
இதையும் வாசிக்கலாமே... HBD Shalini Ajith | அஜித் காட்டிய அக்கறை... வாழ்க்கையை ‘அமர்க்களமாய்’ மாற்றிய சினிமா!
துறைமுகத்தில் 60 படகுகள் எரிந்து நாசம்; கதறும் மீனவர்கள்!
1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்வெட்டுக்கள்... அத்தாளநல்லூர் ஆய்வில் கண்டுபிடிப்பு!
ஐசியுவில் விஜயகாந்த்... என்ன சொல்கிறது மருத்துவமனை நிர்வாகம்?
பிக் பாஸில் மீண்டும் 3 வைல்ட் கார்டு என்ட்ரி... யார் அந்த மூன்று பேர்?