அனாதை விடுதி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் … ஹைதராபாத்தில் தொடரும் சம்பவம்

அனாதை விடுதி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் … ஹைதராபாத்தில் தொடரும் சம்பவம்

ஹைதாராபாத்தில் அனாதை விடுதியில் இருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு ஜூப்ளி ஹில்ஸில் சிறுமி ஒருவர் 5 பேரால் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நினைவில் இருந்து மறைவதற்குள் அடுத்த பாலியல் வன்கொடுமை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள அனாதை விடுதியில் தங்கியிருந்த சிறுமி, கணினி சென்டரில் பணிபுரிந்த சுரேஷ்(23) என்பவருடன் பழகியுள்ளார். ஏப்ரல் 20-ம் தேதி தோழியின் பிறந்த நாளுக்காக இரவு 9 மணி அளவில் விடுதியை விட்டு சிறுமி வெளியேறியுள்ளார்.

அப்போது அங்கு வந்த சுரேஷ் சிறுமியை காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன் பின் அவர் விடுதிக்கு சிறுமி திரும்பியுள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன் சிறுமிக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டது. இதையறிந்த விடுதி ஊழியர்கள் விசாரித்த போது, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து மெஹ்திப்பட்டினத்தில் உள்ள காவல்நிலையத்தில் விடுதி காப்பாளர் நேற்று புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பாலியல் வன்கொடுமை சம்பவம் நெக்லஸ் சாலையில் நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து இவ்வழக்கு ராம்கோபால்பேட்டை காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது. போலீஸார் விசாரணை நடத்தி சுரேஷை கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in