‘இது தாவூத் இப்ராஹிம் உத்தரவு...’ பிரதமர் மோடியை வெடிகுண்டு வீசி கொல்லப்போவதாய் மிரட்டல் விடுத்தவர் கைது

தாவூத் இப்ராஹிம்
தாவூத் இப்ராஹிம்

பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதி தாவூத் இப்ராஹிம் உத்தரவின் பேரில், பிரதமர் மோடியை வெடிகுண்டு வீசி கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்த நபர், மும்பை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் ஒருவர், ’பிரதமர் மோடி மற்றும் உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வெடிகுண்டு வீசி கொல்லப்படுவார்கள்’ என மிரட்டல் விடுத்தார். மேலும், ‘பாகிஸ்தானில் மறைந்து வாழும் பயங்கரவாதியான தாவூத் இப்ராஹிம் கூட்டாளி’ என்றும் தன்னைப் பற்றி அந்த நபர் தெரிவித்தார்.

உடனடியாக செயல்பட்ட சைபர் க்ரைம் போலீஸார், மர்ம நபரின் இருப்பிடத்தை ஆராய்ந்து கண்டறிந்தனர். உடனடியாக அங்கு விரைந்து சென்ற மும்பை போலீஸார், பிரதமருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரைக் கைது செய்தனர். அவரது பின்னணியில் அச்சுறுத்தலுக்கு உரிய பயங்கரவாதிகளின் வலைப்பின்னல் இருக்கிறதா என்றும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

போனில் வெடிகுண்டு மிரட்டல்
போனில் வெடிகுண்டு மிரட்டல்

விசாரணை தொடர்வதால், கைது செய்யப்பட்ட நபர் குறித்த விவரங்களை தற்போதைக்கு போலீஸார் வெளியிடவில்லை. மும்பை தொடர் வெடிகுண்டு சம்பவ வழக்கில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானில் மறைந்து வாழ்கிறார். அங்கிருந்தபடி தனது ’டி-கேங்’ எனப்படும், நிழலுலக நெட்வொர்க் மூலம் மும்பை சாம்ராஜ்ஜியத்தை இயக்கி வருகிறார்.

பிரதமருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் நிஜமாலுமே டி-கேங் தொடர்பில் இருப்பவரா அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக மிரட்டல் விடுத்தாரா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஏனெனில், தனது வெடிகுண்டு தாக்குதல் இலக்குகளின் வரிசையில், மும்பையின் பிரபல ஜே.ஜே மருத்துவமனைக்கும், மர்ம நபர் மிரட்டல் விடுத்திருந்தார். இதனால் குறிப்பிட்ட மருத்துவமனையுடன் தனிப்பட்ட தகராறு எழுந்ததால் இவ்வாறு வெடிகுண்டு மிரட்டலில் ஈடுபட்டாரா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக திகார் சிறையிலிருக்கும் கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோவை விடுவிக்க வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் மெயில் குறித்து தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ விசாரணை மேற்கொண்டது. இதில் மர்ம மெயில் ஐரோப்பாவில் இருந்து வந்திருப்பது தெரிய வந்தது. ஐரோப்பிய நாடுகளின் உளவு அமைப்புகள் உதவியோடு, மிரட்டல் மெயில் தொடர்பான விசாரணை தொடர்ந்து வருகிறது.

மோடி - யோகி
மோடி - யோகி

இந்த வரிசையில் பிரதமர் மோடியின் ஆகஸ்ட் கேரள பயணத்தை முன்னிட்டு அவருக்கு எதிராக தற்கொலைத் தாக்குதல் நடத்தப்படும் என்ற மிரட்டல், கேரள பின்னணியில் விடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணையில், பக்கத்து வீட்டுக்காரருடன் பகைமை பாராட்டி நபர் ஒருவர் அவரை சிக்க வைப்பதற்காக, பிரதமருக்கு மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.

இதையும் வாசிக்கலாமே...


மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது... 4 மணி நேரம் அவகாசம் தர்றேன்... நடிகர் சங்கத்தை எச்சரித்த மன்சூர் அலிகான்!

உத்தராகண்ட் சுரங்க விபத்து; 41 தொழிலாளர்களின் நிலை என்ன? வெளியானது வீடியோ

பரபரப்பு.. வைரமுத்துவை மகளிர் ஆணையம் விசாரிக்க வேண்டும்... ஹெச்.ராஜா வலியுறுத்தல்!

இறப்புக்கு முன் நடிகர் மாரிமுத்து வெளியிட்ட வீடியோ... ரசிகர்கள் உருக்கம்!

ரூ.1,760 கோடி பணம், மதுபானம் பறிமுதல்! தேர்தல் ஆணையம் அதிரடி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in