சிக்கன் பிரியாணியில் எட்டிப் பார்த்த கோழித் தலை... இது மலப்புரம் ஸ்டைல்!

பிரியாணியில் கோழித் தலை
பிரியாணியில் கோழித் தலை

பிரியாணிக்குள் லெக் பீஸ் இருந்து பார்த்திருக்கிறோம். ஆனால், கேரள மாநிலம் மலப்புரத்தில் ஒரு கடைக்காரர் கொடுத்த கோழி பிரியாணியில் சுத்தம் செய்யப்படாத கோழியின் தலை கிடந்திருக்கிறது. இதைப் பார்த்துவிட்டு, ஆசை ஆசையாய் பிரியாணி வாங்கிச் சென்றவர் அரண்டு போயிருக்கிறார்.

கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள திரூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீபா. இவர் முத்தூர் என்ற பகுதியில் இயங்கி வந்த உணவகம் ஒன்றிலிருந்து 4 சிக்கன் பிரியாணி பார்சல் வாங்கிச் சென்றுள்ளார். வீட்டிற்கு சென்று ஆசையாய் பிரியாணி பொட்டலத்தைப் பிரித்தபோது, அதில் ஒரு பிரியாணியில் சுத்தம் செய்யப்படாத கோழியின் தலை எட்டிப் பார்த்திருக்கிறது. எண்ணெயில் நன்கு வறுப்பட்ட நிலையில் இருந்திருக்கிறது அந்தத் தலை. இதைப் பார்த்துவிட்டு மிரண்டுபோன பிரதீபா அப்போதே திரூர் உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்.

உடனடியாக அந்த உணவகத்தில் ஆய்வு நடத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், அங்கு வைக்கப்பட்டிருந்த சிக்கன் பிரியாணி மற்றும் உணவுப் பொருட்களை பறிமுதல் செய்தனர். அந்த உணவகம், உணவு பாதுகாப்புத் துறையிடம் உரிய அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட விஷயம் அப்போது தான் தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து, அந்த உணவகத்துக்கு சீல் வைத்து மூடிய அதிகாரிகள், இதுகுறித்து உணவக உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

சிக்கன் பிரியாணியில் கோழி தலை கிடந்த விவகாரம் மலப்புரம் ஏரியாவில் பரபரப்புச் செய்தியாகி இருக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...

HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!

இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில்  பாதுகாப்பு படை வீரர் காயம்!

திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!

வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in