பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து... தீயை அணைக்க முடியாமல் போராட்டம்; கோவையில் அதிர்ச்சி!

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீவிபத்து
கோவையில் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீவிபத்து

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீவிபத்து மளமளவென பரவி வரும் நிலையில் தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.

கோவை குனியமுத்தூரை அடுத்த இடையர்பாளையம் பகுதியில் கண்ணப்பன் தோட்டம் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கே ஏராளமான பிளாஸ்டிக் குடோன்கள் மற்றும் சிறிய ரக தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இதில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மதியம் பணியாளர்கள் பணியில் இருந்த போது, திடீரென பிளாஸ்டிக் குடோனில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள் உடனடியாக வெளியேறியுள்ளனர்.

தீவிபத்தில் அடுத்தடுத்து இருந்த குடோன்களும் தீயில் எரிந்து நாசம்
தீவிபத்தில் அடுத்தடுத்து இருந்த குடோன்களும் தீயில் எரிந்து நாசம்

குடோனில் மிக வேகமாக தீ மளமளவென பரவி, பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் எரியத் துவங்கியது. இந்த தீ அருகாமையில் உள்ள தலையணை செய்ய பயன்படுத்தப்படும் பஞ்சுகள் வைக்கப்பட்டிருந்த மற்றொருவரின் குடோனுக்கும் பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் கடுமையான புகை மூட்டம் ஏற்பட்டது. அருகாமை குடோன்களில் இருந்த பணியாளர்கள் உடனடியாக வெளியேறினர். இது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீவிபத்தில் மாநகராட்சி குப்பை அள்ளும் வாகனமும் சேதம்
தீவிபத்தில் மாநகராட்சி குப்பை அள்ளும் வாகனமும் சேதம்

தற்போது வரை மூன்று தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. பிளாஸ்டிக் மற்றும் பஞ்சு ஆகியவை தீப்பிடித்து தொடர்ந்து எரிந்து வருவதால் தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனிடையே இந்த குடோன்களின் அருகே நிறுத்தப்பட்டிருந்த கோவை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை அள்ளும் வாகனம் ஒன்றும் தீயில் எரிந்து நாசமானது. தீயை முற்றிலும் அணைத்த பின்னர், தீ விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என குனியமுத்தூர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...    

12ம் வகுப்பு வேதியல் தேர்வு... தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவு!

தலையில் விசிக; கழுத்தில் திமுக... பறையடித்து பட்டையைக் கிளப்பிய திமுக வேட்பாளர்!

பயங்கர தீ விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சாவு!

'மஞ்சுமெல் பாய்ஸ்’ நடிகரை கரம் பிடிக்கும் அபர்ணா தாஸ்... ரசிகர்கள் வாழ்த்து!

ரயிலில் திடீரென ஸ்பைடர் மேனாக மாறிய வாலிபர்... வைரலாகும் அசத்தல் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in