பகீர்... அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து- 7 பேர் தீக்கிரையான சோகம்

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து
மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்ததோடு 39 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள கோரேகான் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இன்று அதிகாலை இந்த குடியிருப்பு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அடுத்தடுத்து பரவிய தீ காரணமாக ஏராளமான வீடுகள் தீயில் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் 46 பேர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இடத்தில் 7 பேர் உயிரிழந்திருப்பதாக பிரிஹன் மும்பை மாநகராட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து
மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து

தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரியாத நிலையில் படுகாயம் அடைந்துள்ள 39 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 8 தீயணைப்பு வாகனங்கள், 5 தண்ணீர் வண்டிகள், ஆம்புலன்ஸ்கள் ஆகியவை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தீ முற்றிலும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தாலும், வேறு யாரேனும் கட்டிடத்திற்குள் சிக்கி இருக்கிறார்களா என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் தற்போது தீவிர சோதனையில் தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in