அதிர்ச்சி... தாயை தீவைத்து எரித்துக்கொன்ற மகன்!

கொலை
கொலை

மகாராஷ்டிராவில் சாப்பாடு தர தாமதமான ஆத்திரத்தில் தாயை, மகன் தீவைத்து எரித்துக் கொலை செய்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

நவிமும்பை அருகே உள்ள அலிபாக், நாவ்கர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயேஷ்(வயது26). இவர் ஐ.டி.ஐ படித்துவிட்டு வேலையில்லாமல் உள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இவரது தாய் சங்குனா, மகனுக்கு உணவு தாமதமாக கொடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜெயேஷ், கோபத்தில் தாயை கம்பால் தாக்கியதுடன், அரிவாளால் வெட்டியுள்ளார். ஆனாலும் ஆத்திரம் தீராத அவர் அருகில் கிடந்த காய்ந்த இலைகள், புல்லை தாய் மீது போட்டு தீ வைத்தார். சங்குனாவின் அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இதையடுத்து அரிவாளுடன் ஜெயேஷ் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். தீயில் எரிந்த சங்குனாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு அலிபாக்கில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தீ விபத்து
தீ விபத்து

இதனைத் தொடர்ந்து போலீசார் காட்டுக்குள் மறைந்து இருந்த ஜெயேசை பிடிக்க சென்றபோது, அவர் அரிவாளை காட்டி போலீசாரை மிரட்டியுள்ளார். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு போலீசார் அவரை கைது செய்தனர். சாப்பாடு தர தாமதமான ஆத்திரத்தில் தாயை மகன் தீவைத்து எரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in