மகாராஷ்டிராவில் கல்யாண மண்டபத்தின் அலுவலகத்திற்கு நுழைந்த சிறுத்தையை பார்த்து பதற்றமடையாமல், புத்திசாலித்தனமாக சத்தமில்லாமல் வெளியே சென்று கதவை மூடி சிறுவன் உயிர் பிழைத்தான். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால், அங்கு வாழும் யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன உயிரினங்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி வருகின்றன. இதனால் மனித வன உயிரினங்களின் மோதல் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற ஒரு சம்பவம், மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் பகுதியில் தனியார் கல்யாண மண்டபம் உள்ளது. இங்கு காவலராக பணிபுரியும் நபர் தனது 12 மகனை இன்று அழைத்து வந்திருந்தார். மண்டபத்தில் உள்ள அலுவலகத்தில் மகனை உட்கார வைத்துவிட்டு, அவர் பிற வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்த சிறுவன் கையில் செல்போன் வைத்து வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அலுவலகத்திற்குள் கேஸூவலாக சிறுத்தை நுழைந்தது. இதைப் பார்த்து சத்தம்போடாமல், அதிர்ச்சி அடையாமல் அந்த சிறுவன் சாதூர்யமாக செயல்பட்டான். சிறுத்தை உள்ளே நுழைந்ததும், சிறுவன் உடனடியாக வெளியே வந்து கதவை மூடி உயிர் தப்பினான்.
பின்னர், இதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தான். அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அலித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் மற்றும் வனத்துறையினர், சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு சிறுத்தையை பிடித்துச் சென்றனர். அதனால், அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
சிறுத்தையை பார்த்த அதிர்ச்சியில் சிறுவன் சத்தமிட்டிருந்தால், கண்டிப்பாக சிறுவனின் உயிர் போயிருக்கும். ஆனால், சிறுத்தையை பார்த்து எந்த பதற்றமும் இல்லாமல் நைசாக வெளியே வந்து கதவையும் பூட்டி தன்னுயிரை காப்பாற்றிய சிறுவனின் சாதூர்யத்தை அப்பகுதி மக்கள் பாராட்டினர். மேலும், இதுதொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
ஷாக்... பிறந்த நாள் கொண்டாட காதலி வீட்டிற்கு சென்ற காதலன் அடித்துக் கொலை!
மருத்துவர்களின் 12 மணி நேர போராட்டத்தால் பெயிண்டருக்கு மீண்டும் கிடைத்த வாழ்க்'கை'
நான்கு மாநில விருதுகள்... பிரபல கதாசிரியர் மாரடைப்பால் திடீர் மரணம்!
நன்றி மறந்தாரா யுவன்?! சர்சையைக் கிளப்பும் ‘தென்மாவட்டம்’!
அடுத்தடுத்து வெளியாகும் ஆபாச புகைப்படங்கள்... 'வில்லேஜ் புட் பேக்டரி' க்கு வந்த சோதனை!