அதிர்ச்சி... மாஜிஸ்திரேட் கார் மோதி தாய், மகள் உள்பட 3 பேர் பலி!

விபத்தை ஏற்படுத்திய கார்.
விபத்தை ஏற்படுத்திய கார்.

பீகாரில் மாதேபுரா மாஜிஸ்திரேட்டின் கார் மோதி தாய், மகள் உள்பட மூன்று பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய கார்.
விபத்தை ஏற்படுத்திய கார்.

பீகார் மாநிலம், மாதேபுரா மாஜிஸ்திரேட் விஜய் பிரகாஷ் மீனாவின் கார் தங்கங்காவில் இருந்து மாதேபுரா நோக்கி இன்று சென்று கொண்டிருந்தது. அப்போது காரில் மாஜிஸ்திரேட் இல்லை என்று கூறப்படுகிறது.

புஸ்பரஸ் காவல் நிலையத்திற்கு உள்பட்ட புர்வாரி தோலா அருகே தேசிய நெஞ்சாலையில் செல்லும் போது மாஜிஸ்திரேட்டின் கார் கட்டுப்பாட்டை இழந்து அவ்வழியாக சென்றவர்கள் மீது பயங்கரமாக மோதியது. அத்துடன் சாலையோர தண்டவாளத்தில் மோதி நின்றது.

விபத்தை ஏற்படுத்திய கார்.
விபத்தை ஏற்படுத்திய கார்.

அப்போது சாலைப் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த குடியா குமாரி(35), அவரது ஐந்து வயது மகள் மற்றும் மற்றொரு ஊழியர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் ராஜஸ்தானைச் சேர்ந்த அசோக்குமார் சிங், ராஜேஸ்குமார் சிங் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக தர்பங்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்களை புஸ்பரஸ் காவல் நிலைய போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அந்த காரை அடித்து சேதப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in