பைக் ஹாரன் அடித்ததால் வெடித்த ஜாதி வன்முறை; 4 பேர் கைது!

மதுரை தாக்குதல்
மதுரை தாக்குதல்

மதுரை அருகே பைக்கில் ஹாரன் அடித்த காரணத்திற்காக தலித்துகள் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், செக்காணுரணியை அடுத்து உள்ளது கொ.புலியங்குளம் கிராமம். இங்குள்ள கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்பகுதியில் திருவிழாவுக்கு வந்த உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த ஆதிக்க சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் சாலையில் நின்று பேசிக்கொண்டு இருந்ததாகவும், அப்போது அவ்வழியாக பைக்கில் சென்ற பட்டியல் சமூக இளைஞர்கள் வழிவிட கோரி ஹாரன் அடித்ததாகவும் கூறப்படுகிறது.

அப்போது, உள்ளூர் ஆதிக்க சாதியினர் அமைதியாக வழிவிட முயன்று உள்ளனர். ஆனால் வெளியூர்களில் இருந்து வந்த ஆதிக்க சமூக இளைஞர்கள், சாதி பெயரை சொல்லி திட்டி இவர்களுக்கு எல்லாம் ஏன் மரியாதை கொடுக்கிறீர்கள் என்று கூறி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பட்டியலின மக்களின் பகுதிக்கு கட்டைகளுடன் சென்று வீடுகளையும், பெண்களையும் தாக்கி தகராறில் ஈடுபட்டதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் 4 பேரை கைது செய்தனர்.

வீடுகளுக்குள் கட்டைகளுடன் புகுந்து இளைஞர்கள் சிலர் தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in